• May 02 2024

இரத்து செய்யப்படும் ரயில் சேவைகள்! ரயில்வே திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Chithra / Apr 19th 2024, 8:41 am
image

Advertisement

 

ரயில் பெட்டிகள் இல்லாமையால் 4 ரயில் சேவைகளை இரத்துச் செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பிரதான மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் பாதையிலேயே குறித்த சேவைகள் இரத்தாகியுள்ளன.

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பிரதான மார்க்கத்தில் காலை 7.2க்கு கொழும்பு – கோட்டையில் இருந்து ராகமை நோக்கி பயணிக்கும் ரயில்  சேவையும்,

ராகமையில் இருந்து காலை 7.30க்கு கொழும்பு - கோட்டை நோக்கி பயணிக்கும் ரயில் சேவைகளும் இரத்தாகியுள்ளன.

அத்துடன் களனிவெளி வீதியின் பாதுக்கை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.20க்கு கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கும் ரயில் சேவையும்,

கொழும்பு – கோட்டையில் இருந்து இரவு 7.15 அளவில் பாதுக்கை நோக்கி பயணிக்கும் ரயில் சேவையும் இரத்தாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இரத்து செய்யப்படும் ரயில் சேவைகள் ரயில்வே திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு  ரயில் பெட்டிகள் இல்லாமையால் 4 ரயில் சேவைகளை இரத்துச் செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.பிரதான மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் பாதையிலேயே குறித்த சேவைகள் இரத்தாகியுள்ளன.எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, பிரதான மார்க்கத்தில் காலை 7.2க்கு கொழும்பு – கோட்டையில் இருந்து ராகமை நோக்கி பயணிக்கும் ரயில்  சேவையும்,ராகமையில் இருந்து காலை 7.30க்கு கொழும்பு - கோட்டை நோக்கி பயணிக்கும் ரயில் சேவைகளும் இரத்தாகியுள்ளன.அத்துடன் களனிவெளி வீதியின் பாதுக்கை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.20க்கு கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கும் ரயில் சேவையும்,கொழும்பு – கோட்டையில் இருந்து இரவு 7.15 அளவில் பாதுக்கை நோக்கி பயணிக்கும் ரயில் சேவையும் இரத்தாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம்  தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement