• Apr 06 2025

புத்தளத்தில் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட கார் விபத்து..! ஒருவர் உயிரிழப்பு,,!Samugammedia

Tamil nila / Dec 22nd 2023, 5:46 am
image

புத்தளம் பகுதியில் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட கார்  மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதூண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற கார் மோட்டார் சைக்கிளை முந்துச் செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிளின் பின்னால் கார் மோதூண்டு கரணமடித்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து புத்தளம் அநுராதபுரம் பிரதான வீதியின் சிறாம்பையடி இரண்டாம் கட்டைப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் காரில் பயனித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் காரின் சாரதி குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்தனர்.



குறித்த விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் தப்போவ மஹாகோன்வெவ பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்தில் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட கார் விபத்து. ஒருவர் உயிரிழப்பு,,Samugammedia புத்தளம் பகுதியில் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட கார்  மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதூண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற கார் மோட்டார் சைக்கிளை முந்துச் செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிளின் பின்னால் கார் மோதூண்டு கரணமடித்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து புத்தளம் அநுராதபுரம் பிரதான வீதியின் சிறாம்பையடி இரண்டாம் கட்டைப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் காரில் பயனித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த நிலையில் காரின் சாரதி குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் தப்போவ மஹாகோன்வெவ பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement