• Nov 30 2024

நாகை, கடலூர் துறைமுகங்களிலிருந்து இலங்கைக்கு விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்து!

Chithra / Nov 29th 2024, 2:28 pm
image

 

இந்தியாவின் நாகை, கடலூர் துறைமுகங்களிலிருந்து மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்குத் தமிழக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஒகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, கொழும்பு, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை உள்ளிட்ட துறைமுகங்களுக்கு கடலூர், நாகை துறைமுகங்களிலிருந்து சரக்குகளைக் கையாள்வதற்குத் தமிழ்நாட்டு கடல்சார் அதிகார சபை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி, இலங்கைக்கு விவசாய பொருட்கள், மீன்சார் பொருட்கள் மற்றும் ஏனைய நுகர்வுப் பொருட்கள் என ஆண்டுக்கு 75 ஆயிரம் டொன் சரக்குகளைக் கையாளவும், எதிர்காலத்தில் இது பன்மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருப்பது இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

நாகை, கடலூர் துறைமுகங்களிலிருந்து இலங்கைக்கு விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்து  இந்தியாவின் நாகை, கடலூர் துறைமுகங்களிலிருந்து மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்குத் தமிழக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஒகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கொழும்பு, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை உள்ளிட்ட துறைமுகங்களுக்கு கடலூர், நாகை துறைமுகங்களிலிருந்து சரக்குகளைக் கையாள்வதற்குத் தமிழ்நாட்டு கடல்சார் அதிகார சபை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இலங்கைக்கு விவசாய பொருட்கள், மீன்சார் பொருட்கள் மற்றும் ஏனைய நுகர்வுப் பொருட்கள் என ஆண்டுக்கு 75 ஆயிரம் டொன் சரக்குகளைக் கையாளவும், எதிர்காலத்தில் இது பன்மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருப்பது இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement