• Nov 28 2024

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட கரட் விலை..!

Chithra / Jan 23rd 2024, 1:12 pm
image


கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய பொது சந்தையில் இன்று கொள்வனவு செய்யப்படும் மரக்கறி விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கரட் கிலோ கிராம் ஒன்றின் விலை திடீரென 230 ரூபாவால் உயர்ந்துள்ளது.

கடந்த காலங்களில் 2000/= ரூபாவுக்கு அதிகமாக உச்ச விலையை கொண்டிருந்த கரட்டின் விலை கடந்த மூன்று நாட்களாக கிலோவுக்கு 900/= ரூபாவுக்கு விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்பட்டு அதை நுகர்வோருக்கு 950/=ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வீழ்ச்சியடைந்து இருந்த கரட்டின் விலை இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை  உச்சம் பெற்றுள்ளது.

கரட் ஒரு கிலோ கிராம் விவசாயிகளிடம் 1130/= ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு, 1180/=ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக நுவரெலியா மத்திய பொருளாதார நிலைய காரியாலயம் அறிவித்துள்ளது.

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட கரட் விலை. கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய பொது சந்தையில் இன்று கொள்வனவு செய்யப்படும் மரக்கறி விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதனடிப்படையில் கரட் கிலோ கிராம் ஒன்றின் விலை திடீரென 230 ரூபாவால் உயர்ந்துள்ளது.கடந்த காலங்களில் 2000/= ரூபாவுக்கு அதிகமாக உச்ச விலையை கொண்டிருந்த கரட்டின் விலை கடந்த மூன்று நாட்களாக கிலோவுக்கு 900/= ரூபாவுக்கு விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்பட்டு அதை நுகர்வோருக்கு 950/=ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில் வீழ்ச்சியடைந்து இருந்த கரட்டின் விலை இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை  உச்சம் பெற்றுள்ளது.கரட் ஒரு கிலோ கிராம் விவசாயிகளிடம் 1130/= ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு, 1180/=ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக நுவரெலியா மத்திய பொருளாதார நிலைய காரியாலயம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement