• Nov 16 2024

தங்க நகைகளை அடகு வைத்தவர்களுக்கு அதிர்ச்சி - மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Jul 25th 2024, 12:05 pm
image

 

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென  இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கிகளில் அடகு வைத்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் .

வங்கிகளால் உரிய நிவாரணம் வழங்கப்படுமாயின், வங்கிகளுக்கு பணம் எவ்வாறு பெற்றுக்கொடுக்கப்படும் என்பது தொடர்பில் தெளிவான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நிவாரண வழங்குவதாக அறிவித்துள்ள போதும், அது எப்போது முதல் அமுலாகும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர்,

அந்த நிவாரணம் வழங்குவதற்கான பணம் நிதி அமைச்சு ஊடாக வங்கிக்கு அனுப்ப வேண்டும். அது நிதிக் கொள்கை நடவடிக்கையாகும். அது என்ன முறையில் வழங்கப்படும் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியாது. அது நிதி அமைச்சின் ஒரு அறிவிப்பாகும்.

நிதி அமைச்சு எவ்வாறு பணத்தை அனுப்பி அதனை செய்யும் என்பது அவர்களுக்கே தெரியும். அந்த நடவடிக்கைக்கும் எங்களும் தொடர்பில்லை. அது நீண்ட தாமதத்தை ஏற்படுத்த கூடும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

தங்க நகைகளை அடகு வைத்தவர்களுக்கு அதிர்ச்சி - மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு  வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென  இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கிகளில் அடகு வைத்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் .வங்கிகளால் உரிய நிவாரணம் வழங்கப்படுமாயின், வங்கிகளுக்கு பணம் எவ்வாறு பெற்றுக்கொடுக்கப்படும் என்பது தொடர்பில் தெளிவான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கம் நிவாரண வழங்குவதாக அறிவித்துள்ள போதும், அது எப்போது முதல் அமுலாகும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர்,அந்த நிவாரணம் வழங்குவதற்கான பணம் நிதி அமைச்சு ஊடாக வங்கிக்கு அனுப்ப வேண்டும். அது நிதிக் கொள்கை நடவடிக்கையாகும். அது என்ன முறையில் வழங்கப்படும் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியாது. அது நிதி அமைச்சின் ஒரு அறிவிப்பாகும்.நிதி அமைச்சு எவ்வாறு பணத்தை அனுப்பி அதனை செய்யும் என்பது அவர்களுக்கே தெரியும். அந்த நடவடிக்கைக்கும் எங்களும் தொடர்பில்லை. அது நீண்ட தாமதத்தை ஏற்படுத்த கூடும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement