• Nov 28 2024

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் - விடுக்கப்பட்ட அழைப்பு

Chithra / Jun 23rd 2024, 3:24 pm
image


இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும்  26 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பு சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசனின் யாழிலுள்ள இல்லத்தில் இன்று இடம்பெற்றது.

அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை கோரியும், பெற்றோர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சுமைகள் மற்றும் மாணவர்களுடைய போசாக்கு பிரச்சினைகள் ஆகிய கோரிக்கைகளை உள்வாங்கி குறித்த  போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.

ஆகையினால் எந்தவித அச்சமும் இல்லாமல் அனைத்து அதிபர்,ஆசிரியர்களும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். 

இத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமிடத்து அதற்கு எதிரான நடவடிக்கைகளை ஆசிரியர் சங்கம் நிச்சயம் எடுக்கும் என்றார்.

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் - விடுக்கப்பட்ட அழைப்பு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும்  26 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பு சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசனின் யாழிலுள்ள இல்லத்தில் இன்று இடம்பெற்றது.அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளது.நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை கோரியும், பெற்றோர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சுமைகள் மற்றும் மாணவர்களுடைய போசாக்கு பிரச்சினைகள் ஆகிய கோரிக்கைகளை உள்வாங்கி குறித்த  போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.ஆகையினால் எந்தவித அச்சமும் இல்லாமல் அனைத்து அதிபர்,ஆசிரியர்களும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமிடத்து அதற்கு எதிரான நடவடிக்கைகளை ஆசிரியர் சங்கம் நிச்சயம் எடுக்கும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement