• May 07 2025

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் சம்பிக்க அதிருப்தி..!

Sharmi / May 6th 2025, 5:06 pm
image

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தரப்பினர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு மிக மந்த கதியில் செயற்படுவதாக  முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளுராட்சி சபைத்  தேர்தலுக்கான வாக்களிப்பில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் வெற்றியீட்டும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என ஜனாதிபதி கூறிய விடயம் உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலைமை மிகவும் கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் பிரசார கண்காணிப்பு பணிகளை தேர்தல் ஆணைக்குழுவும் உரிய நிறுவனங்களும் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை  எனவும் தெரிவித்தார்.



தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் சம்பிக்க அதிருப்தி. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தரப்பினர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு மிக மந்த கதியில் செயற்படுவதாக  முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  குற்றம் சுமத்தியுள்ளார்.உள்ளுராட்சி சபைத்  தேர்தலுக்கான வாக்களிப்பில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.எதிர்க்கட்சிகள் வெற்றியீட்டும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என ஜனாதிபதி கூறிய விடயம் உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இந்த நிலைமை மிகவும் கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தேர்தல் பிரசார கண்காணிப்பு பணிகளை தேர்தல் ஆணைக்குழுவும் உரிய நிறுவனங்களும் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement