• May 20 2024

சாணக்கியன் கொட்டியா (புலி) விவகாரம் - இறுதியில் அலிசப்ரி சபையில் மன்னிப்பு கோரினார்.! samugammedia

Tamil nila / Apr 27th 2023, 4:38 pm
image

Advertisement

வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தான் பயன்படுத்திய வார்த்தை பிரயோகத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்ததுடன் மன்னிப்பும் கோரியிருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஸ்ரீலங்கா சுதந்தியர கட்சியில் போட்டியிட்டிருந்தாகவும் ஆனால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால் இந்த கட்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக இரா.சாணக்கியன் சபையில் குறிப்பிட்டிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2003 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்தியர கட்சி எந்த ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் தற்போது  தனக்கு வாக்களித்த மக்களுக்காகவே இந்த சபையில் உரையாற்றுவதாகவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முன்னதாக நேற்றையதினம் மனுச நாணயக்கார கொட்டியா என சாணக்கியனை விழித்திருந்த விடயம் இன்றும் சபையில் சிறப்புரிமை பிரச்சனையாக முன்வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்றையதினம் அலிசப்ரி சாணக்கியன் மீது சரமாரியதன குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் சாணக்கியன் இன்று பதில் வழங்கியிருந்தார்.

எனினும் இன்றும் சபையில் அநாகரீகமாக நடந்து கொண்டு வார்த்தை பிரயோகங்களை வீசியிருந்த அலிசப்ரி இறுதியில் மன்னிப்பு கோரியதுடன் தான் கூறிய வார்த்தைகளையும் வாபஸ் பெறுவதாக அறிவித்து சபையில் அமர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சாணக்கியன் கொட்டியா (புலி) விவகாரம் - இறுதியில் அலிசப்ரி சபையில் மன்னிப்பு கோரினார். samugammedia வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தான் பயன்படுத்திய வார்த்தை பிரயோகத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்ததுடன் மன்னிப்பும் கோரியிருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நன்றி தெரிவித்துள்ளார்.கடந்த 2003ஆம் ஸ்ரீலங்கா சுதந்தியர கட்சியில் போட்டியிட்டிருந்தாகவும் ஆனால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால் இந்த கட்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக இரா.சாணக்கியன் சபையில் குறிப்பிட்டிருந்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 2003 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்தியர கட்சி எந்த ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் தற்போது  தனக்கு வாக்களித்த மக்களுக்காகவே இந்த சபையில் உரையாற்றுவதாகவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார்.இதற்கு முன்னதாக நேற்றையதினம் மனுச நாணயக்கார கொட்டியா என சாணக்கியனை விழித்திருந்த விடயம் இன்றும் சபையில் சிறப்புரிமை பிரச்சனையாக முன்வைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து நேற்றையதினம் அலிசப்ரி சாணக்கியன் மீது சரமாரியதன குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் சாணக்கியன் இன்று பதில் வழங்கியிருந்தார்.எனினும் இன்றும் சபையில் அநாகரீகமாக நடந்து கொண்டு வார்த்தை பிரயோகங்களை வீசியிருந்த அலிசப்ரி இறுதியில் மன்னிப்பு கோரியதுடன் தான் கூறிய வார்த்தைகளையும் வாபஸ் பெறுவதாக அறிவித்து சபையில் அமர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement