• Apr 25 2026

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

Aathira / Mar 6th 2026, 7:59 am
image

நாட்டின் தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் பொதுவாக சீரான வானிலை நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும்.

இதனால் அதிகாலை நேரங்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கூடுதல் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனுடன், நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் பொதுவாக சீரான வானிலை காணப்படும்.

கடல் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு சுமார் 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசக்கூடும்.

மேலும், நாட்டைச் சூழ உள்ள கடல் பகுதிகள் மிதமான அலையுடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு நாட்டின் தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதேவேளை, நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் பொதுவாக சீரான வானிலை நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும்.இதனால் அதிகாலை நேரங்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கூடுதல் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனுடன், நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் பொதுவாக சீரான வானிலை காணப்படும்.கடல் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு சுமார் 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசக்கூடும்.மேலும், நாட்டைச் சூழ உள்ள கடல் பகுதிகள் மிதமான அலையுடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement