• Sep 20 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பின்னால் அனைவரையும் ஒன்றிணையுமாறு சந்திரகாந்தன் வேண்கோள்!

Tamil nila / Aug 12th 2024, 10:06 pm
image

Advertisement

இந்த நாட்டில் இளைஞர்களை உசுற்பேற்றி இந்த நாட்டினை மோசமான நிலைக்கு கொண்டுசெல்வோருக்கு பின்னால் செல்லாமல் குறுகிய காலத்தில் இந்த நாட்டினை மீட்டெடுத்து சிறந்த கட்டமைப்புடன் கொண்டு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பின்னால் அனைவரையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வேண்கோள் விடுத்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் முதலாவது தேர்தல் அலுவலகம் இன்று மாலை மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு-திருகோணமலை பிரதான வீதியில் இந்த அலுவலகம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும் இந்த அலுவலகத்தின் இணைப்பாளருமான எஸ்.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய ஆதரவு வழங்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து கொண்டுசெல்லும் அலுவலகமாகவும் இது செயற்படவுள்ளதாக இங்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுதர்சன், ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட மகளிர் இணைப்பாளளர் சசிகலா ஜெயதேவா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய சந்திரகாந்தன்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆணையை பெற்றுக் கொடுத்து வெற்றி பெற செய்வதற்காக மட்டக்களப்பு மாநகர மத்தியில் முதலாவது தலைமை காரியாலயயம் திறந்து வைத்துள்ளோம்.

தேர்தல்கள் வருகின்றபோது எமக்கு எதிர் கருத்துக்கள் ஆங்காங்கே வரும் அந்த கருத்துக்கள் எல்லாவற்றையும் முறியடித்து பிரமாண்டமான வெற்றி அடைய வேண்டுமாக இருந்தால் தனி மனிதனுடைய மனங்களில் மாற்றம் வர வேண்டும்.

இந்த ஜனாதிபதி தேர்தல் என்பது மிகவும் ஒரு நெருக்கடியான காலப்பகுதியில் வருகின்றது உங்களுக்கு தெரியும் கோட்டபாய ராஜபக்ச இந்த நாட்டை பொறுப்பேற்கின்ற போது உச்ச அதிகாரத்தோடு இருந்தார் கட்சிகளும் இருந்தது அமைப்புகளும் இருந்தது. ஆனால் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற அடிப்படையில் ஏகோபித்த வாக்குகளை பெற்று விட்டார்.

பின்னர் ஏற்பட்ட கோவிட் தொற்று உரத்தட்டுப்பாடு பொருளாதார வீழ்ச்சி சூறாவளியாக எம்மை அடித்து கரை புரண்டோடி மக்கள் அலுவலர் பட்டார்கள் இறுதியில் அவர் ஓடித் தப்பினார் அதனை நாங்கள் பார்த்தோம்.

இவ்வாறான ஒரு நாட்டை உயர்த்திக் கொண்டு இருக்கின்ற வேளையில் இந்த முயற்சியை தொடர்ந்து கொண்டு செல்லாமல் போனால் மீண்டும் நாடு விழுந்து விடும் என்பதனை நாம் அனைவரும் அறிவோம்.

இங்கு இருக்கின்ற சர்வதேச அரசியல் உங்களுக்கு தெரியும் தெற்காசியாவில் இப்போது பங்களாதேஷில் கடை அடைப்புகள் ஹர்த்தார்கள் தீவைப்புகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது அந்த வகையில் இனிய நாடுகளுக்கும் இந்த நோய் தொற்றுமா என்ற அச்சம் காணப்படுகின்றது.

அதேபோன்று மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெறுகின்ற திட்டம் மத்திய கிழக்கு பூராக இடம் பெறுமா என்கின்ற அச்சம் காணப்படுகின்றது அந்த நிலை ஏற்பட்டால் நாங்கள் மீண்டும் ஒரு பொருளாதார நிலையை சந்திக்க நேரிடும்.

இவ்வாறான சூழ்நிலைகளில் இந்த நாட்டினுடைய கடந்த கால இளமைகளை கருத்தில் கொண்டு உள்ளுராட்சி சபைகள் இயங்காமல் காணப்படுகின்றது மாகாண சபையில் இயங்காமல் காணப்படுகின்ற நிலையில் முதலாவது ஜனநாயக தெரிவாக முதலாவது ஜனாதிபதி தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள போகின்றோம்.

அறிவு ரீதியாக அதிகமான வாசிப்பு பழக்கத்தையும் சர்வதேச தொடர்பானல்களையும் உள்ள தலைவர்களில் பொருளாதார தகமைகள் கொண்ட தலைவராக நாங்கள் ரணில் விக்கிரமசிங்க வை பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நாங்கள் அறிவித்திருந்தோம் இந்த ஜனாதிபதி அவர்களை ஆதரிப்பது என்று அந்த அடிப்படையில் தான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் காரியாலயத்தில் வந்து கூறினார் ஜனாதிபதி இந்த நாட்டில் புரையோடிப் போய் இருக்கின்ற விடயங்கள் நமக்கு தெரியும் மிக நீண்ட அரசியல் வரலாற்றில் இன முரண்பாடு காரணமாக மோசமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம் இந்த நிலைமையை தீர்க்க வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக தமிழர்களுக்கான அதிகார பகிர்வை வழங்க வேண்டும் அதை மிகவும் கூடிய அளவில் கொடுப்பேன் என கூறி இருந்தார்.

இவர் மிக நீண்ட காலமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் இருந்தவர் கடவுளுடைய அதிர்ஷ்டமும் காலத்தின் அதிர்ஷ்டமும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் அதேபோன்று 2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் பலமாக இருந்தபோது விமான நிலையம் தகர்க்கப்பட்ட போது பொருளாதார மிக மோசமாக வீழ்ச்சி அடைந்த போதும் இவர் பிரதமராக இருந்தார் சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்தார் அப்போது அவர் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு சென்று பொருளாதாரத்தை கட்டி எழுப்பி வந்தபோது மீண்டும் பிரச்சினைகளை ஏற்பட்டது.

இவ்வாறு பல பொருளாதார வளர்ச்சிக்கான ஆற்றலையும் அறிவையும் பல சந்தர்ப்பங்களில் உருவாக்கி இருக்கின்றார்.

சம்பந்தன் ஐயாவின் மரண இறுதி சடங்கின் போதும் சம்பந்தன் ஐயா மிக கடினமாக பாடுபட்டு இருக்கின்றார் தமிழர்களுக்காக அந்த விடயத்தை அவருக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அதிகார பகிர்வை செய்து கொடுக்க வேண்டும் என கூறி இருக்கின்றார்.

ஜனாதிபதியாக நாங்கள் நியமிப்பது பொருளாதார பிரச்சினையை மீட்டெடுப்பதற்கு மாத்திரம் அல்ல இந்த இலங்கை நாட்டில் புரையோடிப் போய் காணப்படுகின்ற அதிகார பகிர்வு விடயத்திலும் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அமுலாக்கி கொடுப்பார் என நாங்கள் நம்புகின்றோம்.

அதேபோன்று அவர் இந்த இலங்கை நாட்டில் பொருளாதாரத்தை ஒரு வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்து தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் இடையே ஒரு நல் உறவை ஏற்படுத்தி அதிகார பகிர்வை கொடுத்து ஒரு சிறந்த நாடாக கட்டி எழுப்பி சிங்கப்பூரை போல மதம் சார்பில்லாத இடங்களுக்கு இடையிலான முருகல் அற்ற சரியான அரசியலமைப்பை கொண்டு வந்த தலைவராக மிளிர்ந்து அவர் ஒரு சாதனை பெறுவார் என்று நாங்கள் நம்புகின்றோம்.

இளைஞர்கள் மத்தியில் தற்போது இருக்கின்ற கசப்பான சூழ்நிலையை முன்னிறுத்தி போலி முகநூல்களை பயன்படுத்தி குறிப்பாக ஜேவிபி போன்ற கட்சிகள் மிக மோசமாக நாட்டை அழிக்கின்ற பல திட்டங்களை வகுப்பதை நாங்கள் அவதானிக்கின்றோம்.

நாடு பொருளாதார ரீதியாக பற்றி எரிகின்ற போது எங்களுடைய சிலரும் ஜனநாயகத்தை அழிப்பதற்காகவும் பாராளுமன்றத்தை அழிப்பதற்காகவும் ஏன் மட்டக்களப்பில் இருக்கின்ற அரசியல் காரியாலயங்களை அழிப்பதற்காகவும் பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்தினார்கள்.

இளைஞர்களை உசுப்பேத்தி அவர்களுக்கு பிழையான வழியை காட்டி இந்த நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று சில கட்சிகள் பிழையாக வழிநடத்துகின்றார்கள்.

இவர்களை தோற்கடித்து சரியான ஜனநாயக இயக்கத்தின் ஊடாக மக்களின் ஆணையின் ஊடாக எதிர்கால நம்பிக்கை இன்மையின் காரணமாக நாட்டை அழிக்க நினைக்கின்ற சக்திகளோடு கூட்டு சேர்ந்து இருக்கின்ற இளைஞர்களுக்காகவும் நாங்கள் ஒன்றாக பாடுபட்டு அவர்களுக்கான எதிர்காலத்தை கட்டி எழுப்ப வேண்டும்.

இவ்வாறான இளைஞர்களை அந்த கட்சியின் பால் இருந்து மீட்டெடுத்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிப்பதற்கு தூண்ட வேண்டும் -என்றார். 



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பின்னால் அனைவரையும் ஒன்றிணையுமாறு சந்திரகாந்தன் வேண்கோள் இந்த நாட்டில் இளைஞர்களை உசுற்பேற்றி இந்த நாட்டினை மோசமான நிலைக்கு கொண்டுசெல்வோருக்கு பின்னால் செல்லாமல் குறுகிய காலத்தில் இந்த நாட்டினை மீட்டெடுத்து சிறந்த கட்டமைப்புடன் கொண்டு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பின்னால் அனைவரையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வேண்கோள் விடுத்தார்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் முதலாவது தேர்தல் அலுவலகம் இன்று மாலை மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு-திருகோணமலை பிரதான வீதியில் இந்த அலுவலகம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும் இந்த அலுவலகத்தின் இணைப்பாளருமான எஸ்.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய ஆதரவு வழங்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து கொண்டுசெல்லும் அலுவலகமாகவும் இது செயற்படவுள்ளதாக இங்கு அறிவிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுதர்சன், ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட மகளிர் இணைப்பாளளர் சசிகலா ஜெயதேவா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.இதன்போது உரையாற்றிய சந்திரகாந்தன்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆணையை பெற்றுக் கொடுத்து வெற்றி பெற செய்வதற்காக மட்டக்களப்பு மாநகர மத்தியில் முதலாவது தலைமை காரியாலயயம் திறந்து வைத்துள்ளோம்.தேர்தல்கள் வருகின்றபோது எமக்கு எதிர் கருத்துக்கள் ஆங்காங்கே வரும் அந்த கருத்துக்கள் எல்லாவற்றையும் முறியடித்து பிரமாண்டமான வெற்றி அடைய வேண்டுமாக இருந்தால் தனி மனிதனுடைய மனங்களில் மாற்றம் வர வேண்டும்.இந்த ஜனாதிபதி தேர்தல் என்பது மிகவும் ஒரு நெருக்கடியான காலப்பகுதியில் வருகின்றது உங்களுக்கு தெரியும் கோட்டபாய ராஜபக்ச இந்த நாட்டை பொறுப்பேற்கின்ற போது உச்ச அதிகாரத்தோடு இருந்தார் கட்சிகளும் இருந்தது அமைப்புகளும் இருந்தது. ஆனால் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற அடிப்படையில் ஏகோபித்த வாக்குகளை பெற்று விட்டார்.பின்னர் ஏற்பட்ட கோவிட் தொற்று உரத்தட்டுப்பாடு பொருளாதார வீழ்ச்சி சூறாவளியாக எம்மை அடித்து கரை புரண்டோடி மக்கள் அலுவலர் பட்டார்கள் இறுதியில் அவர் ஓடித் தப்பினார் அதனை நாங்கள் பார்த்தோம்.இவ்வாறான ஒரு நாட்டை உயர்த்திக் கொண்டு இருக்கின்ற வேளையில் இந்த முயற்சியை தொடர்ந்து கொண்டு செல்லாமல் போனால் மீண்டும் நாடு விழுந்து விடும் என்பதனை நாம் அனைவரும் அறிவோம்.இங்கு இருக்கின்ற சர்வதேச அரசியல் உங்களுக்கு தெரியும் தெற்காசியாவில் இப்போது பங்களாதேஷில் கடை அடைப்புகள் ஹர்த்தார்கள் தீவைப்புகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது அந்த வகையில் இனிய நாடுகளுக்கும் இந்த நோய் தொற்றுமா என்ற அச்சம் காணப்படுகின்றது.அதேபோன்று மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெறுகின்ற திட்டம் மத்திய கிழக்கு பூராக இடம் பெறுமா என்கின்ற அச்சம் காணப்படுகின்றது அந்த நிலை ஏற்பட்டால் நாங்கள் மீண்டும் ஒரு பொருளாதார நிலையை சந்திக்க நேரிடும்.இவ்வாறான சூழ்நிலைகளில் இந்த நாட்டினுடைய கடந்த கால இளமைகளை கருத்தில் கொண்டு உள்ளுராட்சி சபைகள் இயங்காமல் காணப்படுகின்றது மாகாண சபையில் இயங்காமல் காணப்படுகின்ற நிலையில் முதலாவது ஜனநாயக தெரிவாக முதலாவது ஜனாதிபதி தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள போகின்றோம்.அறிவு ரீதியாக அதிகமான வாசிப்பு பழக்கத்தையும் சர்வதேச தொடர்பானல்களையும் உள்ள தலைவர்களில் பொருளாதார தகமைகள் கொண்ட தலைவராக நாங்கள் ரணில் விக்கிரமசிங்க வை பார்க்கின்றோம்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நாங்கள் அறிவித்திருந்தோம் இந்த ஜனாதிபதி அவர்களை ஆதரிப்பது என்று அந்த அடிப்படையில் தான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் காரியாலயத்தில் வந்து கூறினார் ஜனாதிபதி இந்த நாட்டில் புரையோடிப் போய் இருக்கின்ற விடயங்கள் நமக்கு தெரியும் மிக நீண்ட அரசியல் வரலாற்றில் இன முரண்பாடு காரணமாக மோசமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம் இந்த நிலைமையை தீர்க்க வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக தமிழர்களுக்கான அதிகார பகிர்வை வழங்க வேண்டும் அதை மிகவும் கூடிய அளவில் கொடுப்பேன் என கூறி இருந்தார்.இவர் மிக நீண்ட காலமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் இருந்தவர் கடவுளுடைய அதிர்ஷ்டமும் காலத்தின் அதிர்ஷ்டமும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் அதேபோன்று 2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் பலமாக இருந்தபோது விமான நிலையம் தகர்க்கப்பட்ட போது பொருளாதார மிக மோசமாக வீழ்ச்சி அடைந்த போதும் இவர் பிரதமராக இருந்தார் சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்தார் அப்போது அவர் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு சென்று பொருளாதாரத்தை கட்டி எழுப்பி வந்தபோது மீண்டும் பிரச்சினைகளை ஏற்பட்டது.இவ்வாறு பல பொருளாதார வளர்ச்சிக்கான ஆற்றலையும் அறிவையும் பல சந்தர்ப்பங்களில் உருவாக்கி இருக்கின்றார்.சம்பந்தன் ஐயாவின் மரண இறுதி சடங்கின் போதும் சம்பந்தன் ஐயா மிக கடினமாக பாடுபட்டு இருக்கின்றார் தமிழர்களுக்காக அந்த விடயத்தை அவருக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அதிகார பகிர்வை செய்து கொடுக்க வேண்டும் என கூறி இருக்கின்றார்.ஜனாதிபதியாக நாங்கள் நியமிப்பது பொருளாதார பிரச்சினையை மீட்டெடுப்பதற்கு மாத்திரம் அல்ல இந்த இலங்கை நாட்டில் புரையோடிப் போய் காணப்படுகின்ற அதிகார பகிர்வு விடயத்திலும் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அமுலாக்கி கொடுப்பார் என நாங்கள் நம்புகின்றோம்.அதேபோன்று அவர் இந்த இலங்கை நாட்டில் பொருளாதாரத்தை ஒரு வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்து தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் இடையே ஒரு நல் உறவை ஏற்படுத்தி அதிகார பகிர்வை கொடுத்து ஒரு சிறந்த நாடாக கட்டி எழுப்பி சிங்கப்பூரை போல மதம் சார்பில்லாத இடங்களுக்கு இடையிலான முருகல் அற்ற சரியான அரசியலமைப்பை கொண்டு வந்த தலைவராக மிளிர்ந்து அவர் ஒரு சாதனை பெறுவார் என்று நாங்கள் நம்புகின்றோம்.இளைஞர்கள் மத்தியில் தற்போது இருக்கின்ற கசப்பான சூழ்நிலையை முன்னிறுத்தி போலி முகநூல்களை பயன்படுத்தி குறிப்பாக ஜேவிபி போன்ற கட்சிகள் மிக மோசமாக நாட்டை அழிக்கின்ற பல திட்டங்களை வகுப்பதை நாங்கள் அவதானிக்கின்றோம்.நாடு பொருளாதார ரீதியாக பற்றி எரிகின்ற போது எங்களுடைய சிலரும் ஜனநாயகத்தை அழிப்பதற்காகவும் பாராளுமன்றத்தை அழிப்பதற்காகவும் ஏன் மட்டக்களப்பில் இருக்கின்ற அரசியல் காரியாலயங்களை அழிப்பதற்காகவும் பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்தினார்கள்.இளைஞர்களை உசுப்பேத்தி அவர்களுக்கு பிழையான வழியை காட்டி இந்த நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று சில கட்சிகள் பிழையாக வழிநடத்துகின்றார்கள்.இவர்களை தோற்கடித்து சரியான ஜனநாயக இயக்கத்தின் ஊடாக மக்களின் ஆணையின் ஊடாக எதிர்கால நம்பிக்கை இன்மையின் காரணமாக நாட்டை அழிக்க நினைக்கின்ற சக்திகளோடு கூட்டு சேர்ந்து இருக்கின்ற இளைஞர்களுக்காகவும் நாங்கள் ஒன்றாக பாடுபட்டு அவர்களுக்கான எதிர்காலத்தை கட்டி எழுப்ப வேண்டும்.இவ்வாறான இளைஞர்களை அந்த கட்சியின் பால் இருந்து மீட்டெடுத்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிப்பதற்கு தூண்ட வேண்டும் -என்றார். 

Advertisement

Advertisement

Advertisement