• Nov 25 2024

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவராகிறார் சந்திரிக்கா..! எடுக்கப்பட்ட தீர்மானம்

Chithra / Feb 7th 2024, 9:33 am
image



பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நேற்று (06) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணி என்ற குடையின் கீழ் போட்டியிடவுள்ளது.

பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமைத்துவ சபையில் 25% பிரதிநிதித்துவமும்,

செயற்குழுவில் 50% அதிகாரமும் இருக்கும் எனவும் திசர குணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய அதிகாரி சபையை எதிர்வரும் 22ஆம் திகதி நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி கட்சியின் செயலாளர் பதவிக்கு புதியவர் நியமிக்கப்படுவார் என தெரியவருகின்றது.


பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவராகிறார் சந்திரிக்கா. எடுக்கப்பட்ட தீர்மானம் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நேற்று (06) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணி என்ற குடையின் கீழ் போட்டியிடவுள்ளது.பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமைத்துவ சபையில் 25% பிரதிநிதித்துவமும்,செயற்குழுவில் 50% அதிகாரமும் இருக்கும் எனவும் திசர குணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய அதிகாரி சபையை எதிர்வரும் 22ஆம் திகதி நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி கட்சியின் செயலாளர் பதவிக்கு புதியவர் நியமிக்கப்படுவார் என தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement