• Nov 06 2024

தேங்காய் எண்ணெய் இறக்குமதி வரியில் மாற்றம்...!அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி...!

Sharmi / Jun 25th 2024, 9:07 pm
image

Advertisement

சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான வரியை குறைக்கும் யோசனையை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு தற்போது அறவிடப்படும் வரி 150 ரூபாவாகும்.

நாட்டில் தற்போது 70,000 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகரிப்பு எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, நாட்டில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு இல்லாத நிலையில், தேங்காய் எண்ணெய் மாஃபியாவின் விலையை அதிகரிக்க முயற்சிப்பது தந்திரமான உத்தி என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மீதான விற்பனை வரியை 2025 ஆம் ஆண்டு வரை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தேங்காய் எண்ணெய் இறக்குமதி வரியில் மாற்றம்.அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி. சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான வரியை குறைக்கும் யோசனையை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.இறக்குமதி செய்யப்படும் ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு தற்போது அறவிடப்படும் வரி 150 ரூபாவாகும்.நாட்டில் தற்போது 70,000 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகரிப்பு எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.எனவே, நாட்டில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு இல்லாத நிலையில், தேங்காய் எண்ணெய் மாஃபியாவின் விலையை அதிகரிக்க முயற்சிப்பது தந்திரமான உத்தி என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மீதான விற்பனை வரியை 2025 ஆம் ஆண்டு வரை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement