• Jun 23 2024

எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்; மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பில் பேராசிரியர் அதிர்ச்சி தகவல்

Chithra / Jun 16th 2024, 7:47 am
image

Advertisement

 

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவினால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாகக் குறையாததால் போக்குவரத்துச் செலவு மற்றும் பொதுவான வாழ்க்கைச் செலவு குறைவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் 95 ரக பெட்ரோலின் விலை சுமார் 420 ரூபாவாக இருந்ததாகவும், தற்போதும் அதே விலையே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாத நிலவரப்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், 68 டொலராக குறைந்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 83 டொலராக அதிகரித்து, கடந்த ஜூன் மாதம் 74 டொலராகக் குறைந்துள்ளது.

அதாவது செப்டம்பர் 2023 முதல் தற்போது வரை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 27 சதவீதம் குறைந்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் பெட்ரோலின் விலை 2023 செப்டெம்பர் மாதத்திற்குள் சுமார் 420 ரூபாவாக இருந்த நிலையில், இன்று வரை விலை அப்படியே உள்ளது.

2023 செப்டெம்பர் மாதத்திற்குள் 92 ரக பெட்ரோல் ஒன்றின் விலை 365 ரூபாவாக இருந்த நிலையில் இன்று 10 ரூபாவினால் குறைந்து 355 ரூபாவாகியுள்ளது.

அதாவது லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் 351 ரூபாவாக இருந்த நிலையில் இன்று 11 வீதத்தினால் 317 ரூபாவாக குறைந்துள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரை லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 421 ரூபாவாக இருந்த நிலையில், இன்று ஒரு லீற்றரின் விலை 377 ரூபாவாகும். அதாவது 12 சதவீதம் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்; மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பில் பேராசிரியர் அதிர்ச்சி தகவல்  உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவினால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாகக் குறையாததால் போக்குவரத்துச் செலவு மற்றும் பொதுவான வாழ்க்கைச் செலவு குறைவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.2023 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் 95 ரக பெட்ரோலின் விலை சுமார் 420 ரூபாவாக இருந்ததாகவும், தற்போதும் அதே விலையே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.கடந்த ஆண்டு செப்டெம்பர் மாத நிலவரப்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், 68 டொலராக குறைந்துள்ளது.இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 83 டொலராக அதிகரித்து, கடந்த ஜூன் மாதம் 74 டொலராகக் குறைந்துள்ளது.அதாவது செப்டம்பர் 2023 முதல் தற்போது வரை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 27 சதவீதம் குறைந்துள்ளது.இதற்கமைய, இலங்கையில் பெட்ரோலின் விலை 2023 செப்டெம்பர் மாதத்திற்குள் சுமார் 420 ரூபாவாக இருந்த நிலையில், இன்று வரை விலை அப்படியே உள்ளது.2023 செப்டெம்பர் மாதத்திற்குள் 92 ரக பெட்ரோல் ஒன்றின் விலை 365 ரூபாவாக இருந்த நிலையில் இன்று 10 ரூபாவினால் குறைந்து 355 ரூபாவாகியுள்ளது.அதாவது லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் 351 ரூபாவாக இருந்த நிலையில் இன்று 11 வீதத்தினால் 317 ரூபாவாக குறைந்துள்ளது.கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரை லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 421 ரூபாவாக இருந்த நிலையில், இன்று ஒரு லீற்றரின் விலை 377 ரூபாவாகும். அதாவது 12 சதவீதம் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement