• May 17 2024

இலங்கையில் பொருட்களின் இறக்குமதியில் ஏற்படவுள்ள மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு samugammedia

Chithra / Jul 6th 2023, 11:55 am
image

Advertisement

 இலங்கையில் இறக்குமதி தடைகள் மேலும் தளர்த்தப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வெளிநாட்டு நாணய கையிருப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அண்மையில் 286 வகையான பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்பட்டிருந்தது,

இதேவேளை தற்போது மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் விரைவில் மேலும் சில பொருட்கள் மீதான இறக்குமதி தடையும் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த ஆண்டின் இறுதியில் 800க்கும் அதிகமான பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு நாட்டின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு  கடந்த ஜூன் மாத இறுதியில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இடமாற்று வசதியை உள்ளடக்கியது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இலங்கையில் பொருட்களின் இறக்குமதியில் ஏற்படவுள்ள மாற்றம் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு samugammedia  இலங்கையில் இறக்குமதி தடைகள் மேலும் தளர்த்தப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.வெளிநாட்டு நாணய கையிருப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அண்மையில் 286 வகையான பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்பட்டிருந்தது,இதேவேளை தற்போது மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் விரைவில் மேலும் சில பொருட்கள் மீதான இறக்குமதி தடையும் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஆண்டின் இறுதியில் 800க்கும் அதிகமான பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.அத்தோடு நாட்டின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு  கடந்த ஜூன் மாத இறுதியில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த எண்ணிக்கையானது சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இடமாற்று வசதியை உள்ளடக்கியது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement