• Sep 20 2024

நாட்டின் பல பகுதிகளில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்- மக்களுக்கு எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Jun 3rd 2023, 7:40 pm
image

Advertisement

நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் காலநிலையில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலநிலை தொடர்பில் இன்றைய தினம் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை அடுத்த சில நாட்களில் படிப்படியாக நிலைபெறக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடமேற்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாட்டின் பல பகுதிகளில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்- மக்களுக்கு எச்சரிக்கை samugammedia நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் காலநிலையில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலநிலை தொடர்பில் இன்றைய தினம் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை அடுத்த சில நாட்களில் படிப்படியாக நிலைபெறக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை வடமேற்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.நாட்டில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement