• Nov 25 2024

பிரித்தானிய விசாத்திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்!

Anaath / Sep 14th 2024, 5:18 pm
image

பிரித்தானிய விசா திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளதாக  அந்த நாட்டு அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றமானது எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நடைமுறையின் அடிப்படையில்  2025-க்குள் பிரித்தானியாவிற்கு வருவதற்கு முன்பே அனுமதி பெற வேண்டும் எனவும் பிரித்தானிய உள்துறை அமைச்சர் Yvette Cooper அறிவித்துள்ளார்.

அத்துடன் எதிரவரும் நவம்பர் மாதம் நவம்பரில் இருந்து நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின்படி, பிரித்தானியாவிற்கு விசா இல்லாமல் வரும் பயணிகள் 10 பவுண்ட்  ( இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.4000) கட்டணத்தை செலுத்தி, முன்னதாக அனுமதி பெற வேண்டும்.

இதற்கு 10 பவுண்டுகள் கட்டணம் விதிக்கப்பட்டு, இம்முறை கட்டாயமாக கத்தார், பார்ஹைன், குவைத், ஒமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் குடியுரிமையாளர்கள் பயண அனுமதி பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ETA திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்த பிறகு, யார் யார் பிரித்தானியாவிற்கு பயணம் செய்கின்றனர் என்பதற்கான முழுமையான கண்காணிப்பு சாத்தியமாகும் என்றும், பயண அனுமதி தேவையில் இருந்து வரும் வெளிப்பாடுகள் நிரப்பப்படும் என்றும் கூப்பர் கூறியுள்ளார்.

இதில் ETA என்பது பயணிகளை பிரித்தானியாவிற்கு வருவதற்கு முன்பு மின்னணு அனுமதி பெறச் செய்யும் திட்டமாகும். இதன் மூலம், யார், ஏன் பிரித்தானியாவிற்கு வருகிறார்கள் என்பதை அரசு அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், கத்தார், பார்ஹைன், குவைத், ஒமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் குடியுரிமையாளர்கள் ETA க்கு விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் பிற நாடுகளின் குடியுரிமையாளர்களுக்கான கட்டாயம் 2025ல் அமுலுக்கு வரும். 2024 நவம்பர் மாதம் முதல், பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் குடியுரிமையாளர்களைத் தவிர, அனைத்து பிற தேசியக்குடியுரிமையாளர்களும் ETA பெற வேண்டியது கட்டாயமாகும்.

2025 ஜனவரி 8 முதல் இந்த விதி நடைமுறையில் இருக்கும். ஐரோப்பிய குடியுரிமையாளர்களுக்கு 2025 மார்ச் மாதத்தில் இருந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, 2025 ஏப்ரல் 2-ஆம் திகதி முதல் பயணத்துக்கு முன்னதாக ETA பெறுவது அவசியமாகும்.

அத்துடன் ETA கட்டணம் 10 பவுண்டுகள் , இது இரண்டு ஆண்டுகள் அல்லது பாஸ்போர்ட் காலாவதியாகும் வரை செல்லும். பயணிகள் பல முறை இங்கிலாந்துக்கு வர அனுமதிக்கப்படுகிறது.

ETA-க்கு விண்ணப்பிக்கும்  பயணிகள் UK ETA App மூலம் விண்ணப்பிக்கலாம். ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் gov.uk இணையதளத்தில் "Apply for an Electronic Travel Authorisation" எனும் தேடலை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது, பாஸ்போர்ட் விவரங்கள், பயணிக்கும் இடம் மற்றும் பயண காரணம் உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் முடிவு தரப்படுகிறது.

அத்துடன் ETA மறுக்கப்பட்டால், அந்த நபர் விசா பெறுவதற்காக தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ETA இன்றி வர விரும்புவோர் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும்  புதிய ETA திட்டம் 2025ல் முழுமையாக நடைமுறைக்கு வந்ததும், பிரித்தானிய பயணிகளின் அனுமதி விதிமுறைகள் மேலும் கட்டுப்பாடுகளுடன் செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய விசாத்திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள் பிரித்தானிய விசா திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளதாக  அந்த நாட்டு அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாற்றமானது எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடைமுறையின் அடிப்படையில்  2025-க்குள் பிரித்தானியாவிற்கு வருவதற்கு முன்பே அனுமதி பெற வேண்டும் எனவும் பிரித்தானிய உள்துறை அமைச்சர் Yvette Cooper அறிவித்துள்ளார்.அத்துடன் எதிரவரும் நவம்பர் மாதம் நவம்பரில் இருந்து நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின்படி, பிரித்தானியாவிற்கு விசா இல்லாமல் வரும் பயணிகள் 10 பவுண்ட்  ( இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.4000) கட்டணத்தை செலுத்தி, முன்னதாக அனுமதி பெற வேண்டும்.இதற்கு 10 பவுண்டுகள் கட்டணம் விதிக்கப்பட்டு, இம்முறை கட்டாயமாக கத்தார், பார்ஹைன், குவைத், ஒமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் குடியுரிமையாளர்கள் பயண அனுமதி பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ETA திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்த பிறகு, யார் யார் பிரித்தானியாவிற்கு பயணம் செய்கின்றனர் என்பதற்கான முழுமையான கண்காணிப்பு சாத்தியமாகும் என்றும், பயண அனுமதி தேவையில் இருந்து வரும் வெளிப்பாடுகள் நிரப்பப்படும் என்றும் கூப்பர் கூறியுள்ளார்.இதில் ETA என்பது பயணிகளை பிரித்தானியாவிற்கு வருவதற்கு முன்பு மின்னணு அனுமதி பெறச் செய்யும் திட்டமாகும். இதன் மூலம், யார், ஏன் பிரித்தானியாவிற்கு வருகிறார்கள் என்பதை அரசு அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.அண்மையில், கத்தார், பார்ஹைன், குவைத், ஒமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் குடியுரிமையாளர்கள் ETA க்கு விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் பிற நாடுகளின் குடியுரிமையாளர்களுக்கான கட்டாயம் 2025ல் அமுலுக்கு வரும். 2024 நவம்பர் மாதம் முதல், பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் குடியுரிமையாளர்களைத் தவிர, அனைத்து பிற தேசியக்குடியுரிமையாளர்களும் ETA பெற வேண்டியது கட்டாயமாகும்.2025 ஜனவரி 8 முதல் இந்த விதி நடைமுறையில் இருக்கும். ஐரோப்பிய குடியுரிமையாளர்களுக்கு 2025 மார்ச் மாதத்தில் இருந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, 2025 ஏப்ரல் 2-ஆம் திகதி முதல் பயணத்துக்கு முன்னதாக ETA பெறுவது அவசியமாகும்.அத்துடன் ETA கட்டணம் 10 பவுண்டுகள் , இது இரண்டு ஆண்டுகள் அல்லது பாஸ்போர்ட் காலாவதியாகும் வரை செல்லும். பயணிகள் பல முறை இங்கிலாந்துக்கு வர அனுமதிக்கப்படுகிறது.ETA-க்கு விண்ணப்பிக்கும்  பயணிகள் UK ETA App மூலம் விண்ணப்பிக்கலாம். ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் gov.uk இணையதளத்தில் "Apply for an Electronic Travel Authorisation" எனும் தேடலை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் போது, பாஸ்போர்ட் விவரங்கள், பயணிக்கும் இடம் மற்றும் பயண காரணம் உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் முடிவு தரப்படுகிறது.அத்துடன் ETA மறுக்கப்பட்டால், அந்த நபர் விசா பெறுவதற்காக தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ETA இன்றி வர விரும்புவோர் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.மேலும்  புதிய ETA திட்டம் 2025ல் முழுமையாக நடைமுறைக்கு வந்ததும், பிரித்தானிய பயணிகளின் அனுமதி விதிமுறைகள் மேலும் கட்டுப்பாடுகளுடன் செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement