• May 19 2024

மன்னாரில் அணைக்கட்டு ஒன்றை அமைத்து தருமாறு பவித்திரா வன்னியாராச்சியிடம் சார்ள்ஸ் நிர்மலநாதன் விடுத்த கோரிக்கை...!samugammedia

Anaath / Sep 20th 2023, 6:18 pm
image

Advertisement

மன்னார் மாவட்டத்துக்குரிய குடிநீர் அமைப்பதற்கு மன்னார் மாவட்டத்துக்கு உட்பட்ட கல்லாறு என்ற இடத்தில் ஒரு அணைக்கட்டு அமைக்க வேண்டும் என சார்ள்ஸ் நிர்மலநாதன் வன இலாகாவுக்கு பொறுப்பான அமைச்சர்  பவித்திரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். 

இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொடு உரையாற்றும்  போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.  

மேலும் அவர் இதுதொடர்பில்,  மன்னார் மாவட்டத்துக்கு உட்பட்ட கல்லாறு என்ற இடத்தில் ஒரு அணைக்கட்டு அமைக்கப்பட்டு அந்த அணைக்கட்டினூடாக தேக்க படுகின்ற நீரை மன்னார்  முதலில் முசலி,நானாட்டான் பிற்பாடு மன்னார் முழுவதுமாக குடிநீர் வழங்குவதற்குரிய திட்டம் இருக்கிறது. ஆனால் தற்பொழுது நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தற்பொழுது மன்னார் மாவட்டத்துக்கு உரிய குடிநீர் என்பது நிலத்தடி நீராகத்தான் இருக்கிறது. 

முருங்கன் பிரதேசத்தில் கட்டுக்கரை பிரதேசத்துக்கு அண்மித்த பிரதேசத்தில் நிலத்தடி நீரை எடுத்து  மன்னார் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் தான் குடிநீர் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

நிலத்தடி நீர் குடிப்பதால் மக்கள் எதிர் நோக்குகின்ற  சிறுநீரக பிரச்சினைகள் கல்சியம் தொடர்பான பிரச்சனைகளை   அமைச்சர்கள் நீங்கள் அறிவீர்கள். 

குறிப்பாக இந்த கல்லாறு திட்டம் என்பது வருடத்துக்கு மழையால் கிடைக்கப்பெறுகின்ற நீரில் 33 MCM நீர் வந்து கடலுக்கு செல்கிறது. கடலுக்கு செல்கின்ற நீரை ஒரு அணைக்கட்டினூடாக தடுத்து அதில் மன்னார் மாவட்டம் முழுவதுமாக 12 MCM நீர் மாத்திரம் வழங்கினால் மன்னார் மாவட்டத்திலிருக்கின்ற அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர், நிலத்தடி நீர் அற்ற, நீர்தேக்க நீராக குடிநீர் வழங்கப்பட முடியும். இதை Water Board டினுடைய தங்களுடைய பணிப்பாளர் நாயகத்துடன் கதைத்த போது அது தனக்குட்பட்ட விடயம் அல்ல. அது அமைச்சரிடம் முறையிட்டு அதற்குரிய தீர்வை பெற்றுக்கொள்ளும்படியாக தங்களுடைய பணிப்பாளர் நாயகம் அவர்கள் தெரிவித்திருக்கிறார். 

ஏனென்று சொன்னால்  அந்த இடத்தில்  நீர் கட்டு ஒன்று அமைக்கபட்டால் அதில் அதிகமான மரங்களுக்கு அது நன்மை பயக்கும் , அதே நேரத்தில் வனவிலங்குகள் குடிப்பதற்கும் அந்த நீர்கட்டினுடாக பெற்றுக்கொள்ள முடியும். 

ஆகவே அமைச்சரை நான் கேட்டுக்கொள்வதென்னவென்று சொன்னால் மன்னார் மாவட்டத்துக்குரிய குடிநீரினுடைய நீர்தேக்கத்தின் கல்லாறு பிரதேசத்தில் ஒரு அணைக்கட்டு, நீர் வளங்கள் அதிகார சபையினுடாக எடுக்கின்ற முயற்சிக்கு வன இலாகா திணைக்களம்  ஒத்துழைப்பு வழங்கி அதற்குரிய அனுமதியை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் மாத்திரம் தன மன்னார் மாவட்டத்தில் வசிக்கும்  சகல மக்களும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பிருக்கும். தற்பொழுது 33MCM மலை நீர் கல்லாறு பலத்தினூடாக கடலில் கலக்கிறது. அனால் மானார் மாவட்டத்துக்கு மொத்தமாக 12MCM நீர் மாத்திரம் போதும். 

நீங்களும் ஏற்கனவே Water Board மேற்பார்வை குழுவினுடைய தலைவராக இருந்திருக்கிறீர்கள்.  

நீங்கள் தலைவராக இருந்த போது பல திட்டங்கள் உங்களூடாக நான் அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டு பல திட்டங்கள் மன்னாரில் நடைபெற்றிருக்கிறது. ஆகவே இந்த திட்டத்தையும் உங்களுடைய நேரடி கவனத்தில் எடுத்து இதற்குரிய அனுமதியை Water Board  திணைகளத்திற்கு நீங்கள் அந்த அனுமதியை வழங்க வேண்டும் என்று இந்த சபையினூடாக நான்  கேட்டு கொள்ளுகிறேன். இதற்குரிய முயற்சியை நீங்கள் எடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மன்னாரில் அணைக்கட்டு ஒன்றை அமைத்து தருமாறு பவித்திரா வன்னியாராச்சியிடம் சார்ள்ஸ் நிர்மலநாதன் விடுத்த கோரிக்கை.samugammedia மன்னார் மாவட்டத்துக்குரிய குடிநீர் அமைப்பதற்கு மன்னார் மாவட்டத்துக்கு உட்பட்ட கல்லாறு என்ற இடத்தில் ஒரு அணைக்கட்டு அமைக்க வேண்டும் என சார்ள்ஸ் நிர்மலநாதன் வன இலாகாவுக்கு பொறுப்பான அமைச்சர்  பவித்திரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொடு உரையாற்றும்  போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.  மேலும் அவர் இதுதொடர்பில்,  மன்னார் மாவட்டத்துக்கு உட்பட்ட கல்லாறு என்ற இடத்தில் ஒரு அணைக்கட்டு அமைக்கப்பட்டு அந்த அணைக்கட்டினூடாக தேக்க படுகின்ற நீரை மன்னார்  முதலில் முசலி,நானாட்டான் பிற்பாடு மன்னார் முழுவதுமாக குடிநீர் வழங்குவதற்குரிய திட்டம் இருக்கிறது. ஆனால் தற்பொழுது நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தற்பொழுது மன்னார் மாவட்டத்துக்கு உரிய குடிநீர் என்பது நிலத்தடி நீராகத்தான் இருக்கிறது. முருங்கன் பிரதேசத்தில் கட்டுக்கரை பிரதேசத்துக்கு அண்மித்த பிரதேசத்தில் நிலத்தடி நீரை எடுத்து  மன்னார் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் தான் குடிநீர் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. நிலத்தடி நீர் குடிப்பதால் மக்கள் எதிர் நோக்குகின்ற  சிறுநீரக பிரச்சினைகள் கல்சியம் தொடர்பான பிரச்சனைகளை   அமைச்சர்கள் நீங்கள் அறிவீர்கள். குறிப்பாக இந்த கல்லாறு திட்டம் என்பது வருடத்துக்கு மழையால் கிடைக்கப்பெறுகின்ற நீரில் 33 MCM நீர் வந்து கடலுக்கு செல்கிறது. கடலுக்கு செல்கின்ற நீரை ஒரு அணைக்கட்டினூடாக தடுத்து அதில் மன்னார் மாவட்டம் முழுவதுமாக 12 MCM நீர் மாத்திரம் வழங்கினால் மன்னார் மாவட்டத்திலிருக்கின்ற அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர், நிலத்தடி நீர் அற்ற, நீர்தேக்க நீராக குடிநீர் வழங்கப்பட முடியும். இதை Water Board டினுடைய தங்களுடைய பணிப்பாளர் நாயகத்துடன் கதைத்த போது அது தனக்குட்பட்ட விடயம் அல்ல. அது அமைச்சரிடம் முறையிட்டு அதற்குரிய தீர்வை பெற்றுக்கொள்ளும்படியாக தங்களுடைய பணிப்பாளர் நாயகம் அவர்கள் தெரிவித்திருக்கிறார். ஏனென்று சொன்னால்  அந்த இடத்தில்  நீர் கட்டு ஒன்று அமைக்கபட்டால் அதில் அதிகமான மரங்களுக்கு அது நன்மை பயக்கும் , அதே நேரத்தில் வனவிலங்குகள் குடிப்பதற்கும் அந்த நீர்கட்டினுடாக பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே அமைச்சரை நான் கேட்டுக்கொள்வதென்னவென்று சொன்னால் மன்னார் மாவட்டத்துக்குரிய குடிநீரினுடைய நீர்தேக்கத்தின் கல்லாறு பிரதேசத்தில் ஒரு அணைக்கட்டு, நீர் வளங்கள் அதிகார சபையினுடாக எடுக்கின்ற முயற்சிக்கு வன இலாகா திணைக்களம்  ஒத்துழைப்பு வழங்கி அதற்குரிய அனுமதியை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் மாத்திரம் தன மன்னார் மாவட்டத்தில் வசிக்கும்  சகல மக்களும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பிருக்கும். தற்பொழுது 33MCM மலை நீர் கல்லாறு பலத்தினூடாக கடலில் கலக்கிறது. அனால் மானார் மாவட்டத்துக்கு மொத்தமாக 12MCM நீர் மாத்திரம் போதும். நீங்களும் ஏற்கனவே Water Board மேற்பார்வை குழுவினுடைய தலைவராக இருந்திருக்கிறீர்கள்.  நீங்கள் தலைவராக இருந்த போது பல திட்டங்கள் உங்களூடாக நான் அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டு பல திட்டங்கள் மன்னாரில் நடைபெற்றிருக்கிறது. ஆகவே இந்த திட்டத்தையும் உங்களுடைய நேரடி கவனத்தில் எடுத்து இதற்குரிய அனுமதியை Water Board  திணைகளத்திற்கு நீங்கள் அந்த அனுமதியை வழங்க வேண்டும் என்று இந்த சபையினூடாக நான்  கேட்டு கொள்ளுகிறேன். இதற்குரிய முயற்சியை நீங்கள் எடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement