• May 17 2024

இலங்கையில் சிறுவர்கள் கூலித் தொழிலாளிகளாக மாற்றப்படும் அபாயம்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை! samugammedia

Chithra / Jun 12th 2023, 2:22 pm
image

Advertisement

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக நிலைமையை கருத்திற் கொண்டு சிறுவர்கள் கூலித்தொழிலாளர்களாக பயன்படுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், பாடசாலைகளை விட்டு இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், பாடசாலைக்கு தொடர்ச்சியாக அனுப்பாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகளவில் அவதானிக்க முடிவதாகவும் அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் தற்போதைய சட்டத்தின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அவர்களின் வாழ்க்கை, சுகாதாரம், கல்வி அல்லது தார்மீக வளர்ச்சிக்கு ஆபத்தில்லாத பணிகளில் மட்டுமே அமர்த்த முடியும்.

மேலும் அந்த சிறுவர்களை பாதுகாப்பற்ற வேலைகளில் அமர்த்துவதும், இரவு நேரங்களில் பணிக்கு அமர்த்துவதும் சட்டவிரோதமானதாகும்.

எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவான சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


இலங்கையில் சிறுவர்கள் கூலித் தொழிலாளிகளாக மாற்றப்படும் அபாயம். விடுக்கப்பட்ட எச்சரிக்கை samugammedia நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக நிலைமையை கருத்திற் கொண்டு சிறுவர்கள் கூலித்தொழிலாளர்களாக பயன்படுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.அத்துடன், பாடசாலைகளை விட்டு இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், பாடசாலைக்கு தொடர்ச்சியாக அனுப்பாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகளவில் அவதானிக்க முடிவதாகவும் அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.நாட்டின் தற்போதைய சட்டத்தின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அவர்களின் வாழ்க்கை, சுகாதாரம், கல்வி அல்லது தார்மீக வளர்ச்சிக்கு ஆபத்தில்லாத பணிகளில் மட்டுமே அமர்த்த முடியும்.மேலும் அந்த சிறுவர்களை பாதுகாப்பற்ற வேலைகளில் அமர்த்துவதும், இரவு நேரங்களில் பணிக்கு அமர்த்துவதும் சட்டவிரோதமானதாகும்.எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவான சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement