• Sep 19 2024

கைவிடப்படும் குழந்தைகள்..! அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை samugammedia

Chithra / May 5th 2023, 7:28 am
image

Advertisement

இலங்கையில் குழந்தைகளைக் கைவிடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் குழந்தைப் பெட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத அல்லது அந்த குழந்தைகளில் விருப்பமில்லாத பெற்றோர்கள், குழந்தைகளை அரசின் பொறுப்பில் விட்டுச் செல்லும் நோக்கியிலேயே குழந்தை பெட்டிகளை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அண்மைய வருடங்களில் 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தமது குழந்தைகளை வீதியில் கைவிட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், கடந்த ஆறு வருடங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்தது 80 சிறுவர்கள் அவநம்பிக்கையான பெற்றோரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்தே குழந்தை பெட்டிகளை அறிமுகப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் என்.ஐ லியனகே தெரிவித்தார்.

இந்தநிலையில் கைக்குழந்தைகளை 'குழந்தை பெட்டிகளில்' விட்டுச் செல்ல விரும்பும் பெற்றோருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் ஆணையாளர் கூறியுள்ளார்.


கைவிடப்படும் குழந்தைகள். அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை samugammedia இலங்கையில் குழந்தைகளைக் கைவிடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் குழந்தைப் பெட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத அல்லது அந்த குழந்தைகளில் விருப்பமில்லாத பெற்றோர்கள், குழந்தைகளை அரசின் பொறுப்பில் விட்டுச் செல்லும் நோக்கியிலேயே குழந்தை பெட்டிகளை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.அண்மைய வருடங்களில் 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தமது குழந்தைகளை வீதியில் கைவிட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அத்துடன், கடந்த ஆறு வருடங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்தது 80 சிறுவர்கள் அவநம்பிக்கையான பெற்றோரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனையடுத்தே குழந்தை பெட்டிகளை அறிமுகப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் என்.ஐ லியனகே தெரிவித்தார்.இந்தநிலையில் கைக்குழந்தைகளை 'குழந்தை பெட்டிகளில்' விட்டுச் செல்ல விரும்பும் பெற்றோருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் ஆணையாளர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement