• Sep 24 2024

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அனுரவிற்கு சீனா வாழ்த்து..!

Sharmi / Sep 23rd 2024, 2:51 pm
image

Advertisement

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து சீன அரசு மற்றும் சீன மக்கள் சார்பாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று(23) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்புறவு அண்டை நாடுகள் என்றும் இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வும் ஒத்துழைப்பும்  இருக்கின்றது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரிய நட்புறவை மேலும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் பரஸ்பர நம்பிக்கையை அரசியல் ரீதியாக மேலும் வலுப்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாகும். 

அதேவேளை ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டம் தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.


ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அனுரவிற்கு சீனா வாழ்த்து. இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து சீன அரசு மற்றும் சீன மக்கள் சார்பாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று(23) வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்புறவு அண்டை நாடுகள் என்றும் இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வும் ஒத்துழைப்பும்  இருக்கின்றது.சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரிய நட்புறவை மேலும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் பரஸ்பர நம்பிக்கையை அரசியல் ரீதியாக மேலும் வலுப்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாகும். அதேவேளை ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டம் தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement