• May 19 2024

தாய்வானை சுற்றி சீனா மீண்டும் போர் பயிற்சி! samugammedia

Tamil nila / Aug 19th 2023, 5:27 pm
image

Advertisement

தாய்வானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தாய்வான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தாய்வானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா கடும் கோபத்தில் உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு தாய்வானை சுற்றி கடலில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. 

இதற்கிடையே தாய்வான் துணை ஜனாதிபதி வில்லியம்லாய், சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

இந்த நிலையில் தாய்வானை சுற்றி மீண்டும் சீனா தனது போர் பயிற்சிகளை தொடங்கியுள்ளது. தாய்வான் தீவை சுற்றி சீன கடற்படை மற்றும் விமானப்படை, கூட்டு வான்,இராணுவ பயிற்சிகளை இன்று அதிரடியாக தொடங்கியது. இதை சீன இராணுவ ஊடகப் பேச்சாளர் ஷியி உறுதிப்படுத்தினார். 

இது தொடர்பாக சீனா கூறும்போது, தைவான் துணை ஜனாதிபதி லாய் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். தேசிய இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தது. 

கடந்த ஆண்டு அப்போதைய அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் தாய்வானுக்கு வந்த போது சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த நிலையில் தாய்வான் துணை ஜனாதிபதி, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தாய்வானை சுற்றி சீனா மீண்டும் போர் பயிற்சி samugammedia தாய்வானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தாய்வான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தாய்வானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா கடும் கோபத்தில் உள்ளது.சில மாதங்களுக்கு முன்பு தாய்வானை சுற்றி கடலில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே தாய்வான் துணை ஜனாதிபதி வில்லியம்லாய், சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தாய்வானை சுற்றி மீண்டும் சீனா தனது போர் பயிற்சிகளை தொடங்கியுள்ளது. தாய்வான் தீவை சுற்றி சீன கடற்படை மற்றும் விமானப்படை, கூட்டு வான்,இராணுவ பயிற்சிகளை இன்று அதிரடியாக தொடங்கியது. இதை சீன இராணுவ ஊடகப் பேச்சாளர் ஷியி உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக சீனா கூறும்போது, தைவான் துணை ஜனாதிபதி லாய் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். தேசிய இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தது. கடந்த ஆண்டு அப்போதைய அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் தாய்வானுக்கு வந்த போது சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த நிலையில் தாய்வான் துணை ஜனாதிபதி, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement