• May 19 2024

தாய்வானுக்கு கைகொடுக்கும் அமெரிக்கா - அச்சத்தில் சீனா! samugammedia

Tamil nila / Jul 29th 2023, 7:21 pm
image

Advertisement

சீனாவிலிருந்து வரக்கூடிய தாக்குதல்களை எதிர்கொள்ளவும், தற்காப்பு திறனை மேம்படுத்தி கொள்ளவும், தாய்வானுக்கு அமெரிக்கா சுமார் ரூ.2800 கோடி மதிப்பிலான இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதனில், உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு கருவிகளும், சிறிய ஆயுத வெடிமருந்துகளும் உள்ளடங்கும்.

இதன் மூலமாக, தற்காலத்திலும், எதிர்காலத்திலும் தன் நாட்டிற்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை தாய்வான் தடுக்க முடியும், என அமெரிக்க இராணுவ அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

மேலும் தாய்வானை தனது தேசத்தின் ஓர் பகுதியாக சீனா அறிவித்து வருகின்ற நிலையில், அதற்கு தாய்வான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றது.

இதனால், சீனா தேவையேற்படின் தாய்வானை இராணுவ ஆக்கிரமிப்பு மூலமாக கைப்பற்ற போவதாக கூறி வருகின்றது.

அமெரிக்காவின் இவ்வுதவி தாய்வானுக்கு மிகப்பெரிய வலு சேர்ப்பதோடு, மறுப்புறம் சீனாவிற்கு அச்சறுத்தலாக அமைந்துள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் இவ்வுதவிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, தாய்வான் கடற்பரப்பில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக அமெரிக்காவுடன் பாதுகாப்பு விடயங்களில் தொடர்ந்து ஒத்துழைப்பினை நல்கும் என தெரிவித்துள்ளது.   


தாய்வானுக்கு கைகொடுக்கும் அமெரிக்கா - அச்சத்தில் சீனா samugammedia சீனாவிலிருந்து வரக்கூடிய தாக்குதல்களை எதிர்கொள்ளவும், தற்காப்பு திறனை மேம்படுத்தி கொள்ளவும், தாய்வானுக்கு அமெரிக்கா சுமார் ரூ.2800 கோடி மதிப்பிலான இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இதனில், உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு கருவிகளும், சிறிய ஆயுத வெடிமருந்துகளும் உள்ளடங்கும்.இதன் மூலமாக, தற்காலத்திலும், எதிர்காலத்திலும் தன் நாட்டிற்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை தாய்வான் தடுக்க முடியும், என அமெரிக்க இராணுவ அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.மேலும் தாய்வானை தனது தேசத்தின் ஓர் பகுதியாக சீனா அறிவித்து வருகின்ற நிலையில், அதற்கு தாய்வான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றது.இதனால், சீனா தேவையேற்படின் தாய்வானை இராணுவ ஆக்கிரமிப்பு மூலமாக கைப்பற்ற போவதாக கூறி வருகின்றது.அமெரிக்காவின் இவ்வுதவி தாய்வானுக்கு மிகப்பெரிய வலு சேர்ப்பதோடு, மறுப்புறம் சீனாவிற்கு அச்சறுத்தலாக அமைந்துள்ளது.இதேவேளை அமெரிக்காவின் இவ்வுதவிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, தாய்வான் கடற்பரப்பில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக அமெரிக்காவுடன் பாதுகாப்பு விடயங்களில் தொடர்ந்து ஒத்துழைப்பினை நல்கும் என தெரிவித்துள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement