• May 17 2024

உச்சக்கட்ட பரபரப்பில் சீனா: கொவிட் போருக்கு தயாராகுமாறு சுகாதாரத் தரப்புக்கு உத்தரவு!

Sharmi / Dec 23rd 2022, 9:32 am
image

Advertisement

சீனாவில் மீண்டும் ஒரு கோவிட்-19 போருக்கு தயாராகுங்கள் என்று ஷாங்காய் மருத்துவமனை அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
சீனாவில் தற்போது மீண்டும் அதிகரித்துவரும் கொரோனாவின் தாக்கம், மீண்டும் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை துவக்கியுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையைப் பார்த்து மருத்துவர்களே அச்சமடைந்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் சீனாவின் ஷாங்காய் டெஜி மருத்துவமனை அதன் ஊழியர்களை, மீண்டும் ஒரு கடினமான போருக்கு தயாராகுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அந்நகரத்தின் 25 மில்லியன் மக்களில் பாதி பேர் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

 
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினம், புத்தாண்டு தினம் மற்றும் சீனாவில் கொண்டாடப்படும் சந்திரன் புத்தாண்டு ஆகியவை நமக்கு பாதுகாப்பற்றதாக இருக்கப் போகிறது, வேறு வழியில்லை, நாம் தப்பிக்க முடியாது, அதனால் நீங்கள் ஒரு கடினமான கோவிட்-19 போருக்கு தயாராக இருங்கள் என்று ஷாங்காய் மருத்துவமனை அதன் ஊழியர்களுக்கு கூறியுள்ளது.

உச்சக்கட்ட பரபரப்பில் சீனா: கொவிட் போருக்கு தயாராகுமாறு சுகாதாரத் தரப்புக்கு உத்தரவு சீனாவில் மீண்டும் ஒரு கோவிட்-19 போருக்கு தயாராகுங்கள் என்று ஷாங்காய் மருத்துவமனை அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் தற்போது மீண்டும் அதிகரித்துவரும் கொரோனாவின் தாக்கம், மீண்டும் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை துவக்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையைப் பார்த்து மருத்துவர்களே அச்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சீனாவின் ஷாங்காய் டெஜி மருத்துவமனை அதன் ஊழியர்களை, மீண்டும் ஒரு கடினமான போருக்கு தயாராகுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அந்நகரத்தின் 25 மில்லியன் மக்களில் பாதி பேர் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினம், புத்தாண்டு தினம் மற்றும் சீனாவில் கொண்டாடப்படும் சந்திரன் புத்தாண்டு ஆகியவை நமக்கு பாதுகாப்பற்றதாக இருக்கப் போகிறது, வேறு வழியில்லை, நாம் தப்பிக்க முடியாது, அதனால் நீங்கள் ஒரு கடினமான கோவிட்-19 போருக்கு தயாராக இருங்கள் என்று ஷாங்காய் மருத்துவமனை அதன் ஊழியர்களுக்கு கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement