சீனா மற்றும் இலங்கை நாட்டின் நட்புறவின் பயனாக " சீனாவின் சகோதர பாசம்" என்னும் வாசகத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா நாட்டின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (09)முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நண்பகல் 12.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி திரு. ஜு யான்வேய் (Mr.Zhu Yanwei) அவர்கள் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பயனாளர்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.
குறித்த இந்த உலருணவுப்பொதி வழங்கும் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 350 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதில் முதல் கட்டமாக இன்றையதினம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
ஏனைய 250 பொதிகளும் மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், ஏனைய உத்தியோகத்தர்கள், சீனத்தூதரகத்தின் ஏனைய அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சீனா, இலங்கை நட்புறவு - சீனாவின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு சீனா மற்றும் இலங்கை நாட்டின் நட்புறவின் பயனாக " சீனாவின் சகோதர பாசம்" என்னும் வாசகத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா நாட்டின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (09)முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நண்பகல் 12.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி திரு. ஜு யான்வேய் (Mr.Zhu Yanwei) அவர்கள் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பயனாளர்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.குறித்த இந்த உலருணவுப்பொதி வழங்கும் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 350 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதில் முதல் கட்டமாக இன்றையதினம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.ஏனைய 250 பொதிகளும் மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இன்றைய நிகழ்வில் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், ஏனைய உத்தியோகத்தர்கள், சீனத்தூதரகத்தின் ஏனைய அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.