நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் நேற்று (09) ஏற்பட்ட கோளாறு காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு ஒரு குறுகிய மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்வெட்டு குறித்து எரிசக்தி அமைச்சு இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
மேலும் எந்தவித தடைகளும் இன்றி மின்சாரத்தை வழங்க சுமார் ஒரு வாரம் ஆகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு நாளுக்கு 15 அல்லது 20 நிமிடங்கள் வரை மின் வெட்டு ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சாரசபையின் உயர்மட்டத்திலிருந்து அறிவுறுத்தல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு குறுகிய மின்வெட்டு நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் நேற்று (09) ஏற்பட்ட கோளாறு காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு ஒரு குறுகிய மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்வெட்டு குறித்து எரிசக்தி அமைச்சு இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. மேலும் எந்தவித தடைகளும் இன்றி மின்சாரத்தை வழங்க சுமார் ஒரு வாரம் ஆகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு 15 அல்லது 20 நிமிடங்கள் வரை மின் வெட்டு ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலை காரணமாக, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சாரசபையின் உயர்மட்டத்திலிருந்து அறிவுறுத்தல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் கூறுகின்றன.