• May 18 2024

சீனாவின் கைவசமானது முக்கிய தளம்- அதிர்ச்சியில் இந்தியா! samugammedia

Tamil nila / Oct 3rd 2023, 7:11 am
image

Advertisement

மாலைதீவில் கடந்தவார இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பூகோள அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மாலைதீவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு கொண்ட முகமது முய்சு வெற்றி பெற்றுள்ளமை இந்தியாவுக்கு பாதகமாக வந்துள்ளது.

மாலைதீவு அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றிபெற்றமை நிச்சயமாகவே சீனாவை மகிழ்சிப்படுத்தியிருக்கும்.

இந்த தேர்தலில் தோல்வியடைந்த இப்ராஹிம் முகமது சோலியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான மாலைதீவின் உறவுகள் வலுப்பெற்ற நிலையில் இனி காட்சிகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தனது கடற்படையை வேகமாக விரிவுபடுத்தி வரும் சீனா, மாலைதீவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஆதரவாளரான முகமது முய்சு வெற்றிபெற்றுள்ளார்.

இலங்கையை போல சீனாவிடம் இருந்து மாலைதீவு பெருமளவு கடனை பெற்றுள்ளது. தலைநகர் மாலேயை சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் பாலம் சீன முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் தெற்காசியாவில் சீனாவில் ஆதிக்கம் தீவிரமாக அதிகரித்து வருவது இந்தியாவிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என பூகோள அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

சீனாவின் கைவசமானது முக்கிய தளம்- அதிர்ச்சியில் இந்தியா samugammedia மாலைதீவில் கடந்தவார இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பூகோள அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் மாலைதீவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு கொண்ட முகமது முய்சு வெற்றி பெற்றுள்ளமை இந்தியாவுக்கு பாதகமாக வந்துள்ளது.மாலைதீவு அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றிபெற்றமை நிச்சயமாகவே சீனாவை மகிழ்சிப்படுத்தியிருக்கும்.இந்த தேர்தலில் தோல்வியடைந்த இப்ராஹிம் முகமது சோலியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான மாலைதீவின் உறவுகள் வலுப்பெற்ற நிலையில் இனி காட்சிகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், தனது கடற்படையை வேகமாக விரிவுபடுத்தி வரும் சீனா, மாலைதீவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஆதரவாளரான முகமது முய்சு வெற்றிபெற்றுள்ளார்.இலங்கையை போல சீனாவிடம் இருந்து மாலைதீவு பெருமளவு கடனை பெற்றுள்ளது. தலைநகர் மாலேயை சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் பாலம் சீன முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது.இவ்வாறான சூழலில் தெற்காசியாவில் சீனாவில் ஆதிக்கம் தீவிரமாக அதிகரித்து வருவது இந்தியாவிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என பூகோள அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement