• Dec 25 2024

சீன அரசாங்கத்தினால் கிளிநொச்சி மாவட்ட மீனவர்களுக்கு மீன் பிடி வலைகள்..!

Sharmi / Dec 23rd 2024, 2:26 pm
image

சீன அரசாங்கத்தினால் கிளிநொச்சி மாவட்ட மீனவர்களுக்கு மீன் பிடி வலைகள் வழங்கும் பணி இன்று(23) முன்னெடுக்கப்பட்டது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடபகுதி மீனவர்களுக்கென கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட மீன் பிடி வலைகள் கிளிநொச்சி மாவட்ட மீனவர்களுக்கு வழங்கும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கல் திணைக்கள அலுவலகத்தில் வைத்து மீன் பிடி வலைகள் வழங்கப்பட்டது.  

கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 870 மீனவர்களுக்கு  தலா 06வலைகள் மூலம்  5,220 வலைகள்  பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில்  நீரியல் வளங்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.



சீன அரசாங்கத்தினால் கிளிநொச்சி மாவட்ட மீனவர்களுக்கு மீன் பிடி வலைகள். சீன அரசாங்கத்தினால் கிளிநொச்சி மாவட்ட மீனவர்களுக்கு மீன் பிடி வலைகள் வழங்கும் பணி இன்று(23) முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வடபகுதி மீனவர்களுக்கென கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட மீன் பிடி வலைகள் கிளிநொச்சி மாவட்ட மீனவர்களுக்கு வழங்கும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கல் திணைக்கள அலுவலகத்தில் வைத்து மீன் பிடி வலைகள் வழங்கப்பட்டது.  கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 870 மீனவர்களுக்கு  தலா 06வலைகள் மூலம்  5,220 வலைகள்  பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில்  நீரியல் வளங்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement