• Nov 28 2024

பாடசாலை பரீட்சை வினாத்தாள்கள் கசிவு – விசாரணைகளை ஆரம்பித்த CID!

Chithra / Mar 3rd 2024, 2:56 pm
image


பாடசாலை பரீட்சை வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளிலும் நடத்தப்படவிருந்த மூன்றாம் தவணைக்கான சில பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் நடைபெறவிருந்த மேலும் இரு பாடங்களின் வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பகுதி இரண்டு வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

இதனையடுத்து, விவசாய விஞ்ஞான பாட வினாத்தாளை முழுமையாக ரத்து செய்து மீளவும் பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

பாடசாலை பரீட்சை வினாத்தாள்கள் கசிவு – விசாரணைகளை ஆரம்பித்த CID பாடசாலை பரீட்சை வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இதேவேளை, மேல் மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளிலும் நடத்தப்படவிருந்த மூன்றாம் தவணைக்கான சில பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் நடைபெறவிருந்த மேலும் இரு பாடங்களின் வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பகுதி இரண்டு வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.இதனையடுத்து, விவசாய விஞ்ஞான பாட வினாத்தாளை முழுமையாக ரத்து செய்து மீளவும் பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

Advertisement

Advertisement

Advertisement