• Jan 22 2025

வடமராட்சி கிழக்கு தாளையடியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்!

Tharmini / Jan 22nd 2025, 2:31 pm
image

"செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூரநோக்கை அடையும் விதத்தில் "கிளீன் ஸ்ரீலங்கா" செயற்றிட்டத்தில் இன்று (22)  வடமராட்சி கிழக்கு தாளையடி பிராந்தியத்தில் கடற்கரை பிரதேசங்களை  சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தாளையடி கடற்கரைப் பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை இலங்கை இராணுவத்தின் 52வது படையணியுடன்  இணைந்து, பருத்தித்துறை பிரதேச சபை, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள்,  சமூர்த்திப் பயனாளிகள், கிராம அலுவலர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவு  சங்கங்கள்,  வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசம், விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பிரதேச வாழ் பொதுமக்கள் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ  தளபதி மேஜர் ஜென்ரல் மாதவ யம்பத், கட்டைக்காடு, மிருசுவில், முகமாலை படை முகாம்களின்  அதிகாரிகள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி,  வெற்றிலைக்கேணி கடற்படை முகாமின் பொறுப்பதிகாரி கிரிசாந்த ரணசிங்க, கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத் தந்தை அ.அமல்ராஜ் அடிகளார் முள்ளியான் வைத்தியசாலை வைத்திய அதிகாரி யோ.திவ்யா, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





வடமராட்சி கிழக்கு தாளையடியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் "செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூரநோக்கை அடையும் விதத்தில் "கிளீன் ஸ்ரீலங்கா" செயற்றிட்டத்தில் இன்று (22)  வடமராட்சி கிழக்கு தாளையடி பிராந்தியத்தில் கடற்கரை பிரதேசங்களை  சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.தாளையடி கடற்கரைப் பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை இலங்கை இராணுவத்தின் 52வது படையணியுடன்  இணைந்து, பருத்தித்துறை பிரதேச சபை, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள்,  சமூர்த்திப் பயனாளிகள், கிராம அலுவலர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவு  சங்கங்கள்,  வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசம், விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பிரதேச வாழ் பொதுமக்கள் மேற்கொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ  தளபதி மேஜர் ஜென்ரல் மாதவ யம்பத், கட்டைக்காடு, மிருசுவில், முகமாலை படை முகாம்களின்  அதிகாரிகள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி,  வெற்றிலைக்கேணி கடற்படை முகாமின் பொறுப்பதிகாரி கிரிசாந்த ரணசிங்க, கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத் தந்தை அ.அமல்ராஜ் அடிகளார் முள்ளியான் வைத்தியசாலை வைத்திய அதிகாரி யோ.திவ்யா, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement