• Feb 09 2025

கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் மீட்பு

Thansita / Feb 8th 2025, 6:51 am
image

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது 

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் 

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று  வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காடு கடற்கரை பகுதியில் கண்காணிப்பை மேற்கொண்ட வேளை கடற்கரை பகுதியில் சிறு பொதியில் இருந்த 1Kg கொக்கைன் போதை பொருளை மீட்டுள்ளனர் 

மீட்கப்பட்ட போதை பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் மீட்பு வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று  வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காடு கடற்கரை பகுதியில் கண்காணிப்பை மேற்கொண்ட வேளை கடற்கரை பகுதியில் சிறு பொதியில் இருந்த 1Kg கொக்கைன் போதை பொருளை மீட்டுள்ளனர் மீட்கப்பட்ட போதை பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement