புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயதுச் சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திற்குச் சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வீட்டார் குறித்த சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுமி முன்னரே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
6 வயதுச் சிறுமியை பலியெடுத்த மின்சாரம் - வவுனியாவில் துயரம் புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயதுச் சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திற்குச் சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.வீட்டார் குறித்த சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுமி முன்னரே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.