• May 19 2024

முதலாவது இன்னிங்சில் 49 ஓட்டங்களுக்குள் சுருண்டது - கொழும்பு இந்துக் கல்லூரி அணி..! samugammedia

Tamil nila / Jun 30th 2023, 5:36 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணியின் சிறப்பான பந்து வீச்சுக் காரணமாக கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதலாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 49 ஓட்டகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதனை தொடர்ந்து பலோ ஓண் முறையில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி தற்போது இரண்டாவது இன்னிங்கில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

கொழும்பு இந்துக் கல்லூரி அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித்தலைவர் டிலோஜன் 17 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார்.


யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி சார்பில் பந்து வீச்சில் கஜாநாத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்துக்களின் மாபெரும் சமர் என வர்ணிக்கப்படுகின்ற கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி, 12வது தடவையாக 2023ஆம் ஆண்டு கொழும்பு சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்றைய தினம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இன்றைய தினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்திருந்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியினை 182 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. தொடர்ந்து கொழும்பு இந்துக் கல்லூரி அணி துடுப்பெடுத்தாடுகின்றது.

இரண்டு நாள் போட்டியாக இந்த தொடர் நடைபெறுகின்றமையுமையும் குறிப்பிடத்தக்கது.

முதலாவது இன்னிங்சில் 49 ஓட்டங்களுக்குள் சுருண்டது - கொழும்பு இந்துக் கல்லூரி அணி. samugammedia யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணியின் சிறப்பான பந்து வீச்சுக் காரணமாக கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதலாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 49 ஓட்டகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.இதனை தொடர்ந்து பலோ ஓண் முறையில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி தற்போது இரண்டாவது இன்னிங்கில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.கொழும்பு இந்துக் கல்லூரி அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித்தலைவர் டிலோஜன் 17 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார்.யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி சார்பில் பந்து வீச்சில் கஜாநாத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.இந்துக்களின் மாபெரும் சமர் என வர்ணிக்கப்படுகின்ற கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி, 12வது தடவையாக 2023ஆம் ஆண்டு கொழும்பு சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்றைய தினம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இன்றைய தினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்திருந்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியினை 182 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. தொடர்ந்து கொழும்பு இந்துக் கல்லூரி அணி துடுப்பெடுத்தாடுகின்றது.இரண்டு நாள் போட்டியாக இந்த தொடர் நடைபெறுகின்றமையுமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement