• Sep 21 2024

சஹ்ரான் தோட்டத்தில் புதையல் தேடிய அதிரடிப்படையினர்; தலை தெறிக்க ஓடிய பூசகர்! samugammedia

Tamil nila / Apr 19th 2023, 8:00 pm
image

Advertisement

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு சந்தேகநபரன பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமுக்குச் சொந்தமான தோட்டத்தில் புதையல் தேடிய அதிரடிப்படையினர் கைதாகியுள்ளனர்.

புத்தளம், வண்ணாத்தவில்லு தவில்லுவ, லாக்டோ தோட்டத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள்கள் இருவர், இன்று (19) அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப் படை தெரிவித்துள்ளது.

புதையலை பெற்றுக்கொள்வதற்காக யாகம் செய்ததாகக் கூறப்படும் பூசகர் சோதனை நடத்தப்பட்டபோது தப்பிச் சென்றதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய நபரை கைதுசெய்ய விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சுற்றிவளைப்பு பொலிஸ் விசேட அதிரடிப்படை குருணாகல் முகாமை சேர்ந்த அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பதுளை தல்தென பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் முனமல்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சஹ்ரான் தோட்டத்தில் புதையல் தேடிய அதிரடிப்படையினர்; தலை தெறிக்க ஓடிய பூசகர் samugammedia இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு சந்தேகநபரன பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமுக்குச் சொந்தமான தோட்டத்தில் புதையல் தேடிய அதிரடிப்படையினர் கைதாகியுள்ளனர்.புத்தளம், வண்ணாத்தவில்லு தவில்லுவ, லாக்டோ தோட்டத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள்கள் இருவர், இன்று (19) அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப் படை தெரிவித்துள்ளது.புதையலை பெற்றுக்கொள்வதற்காக யாகம் செய்ததாகக் கூறப்படும் பூசகர் சோதனை நடத்தப்பட்டபோது தப்பிச் சென்றதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.தப்பியோடிய நபரை கைதுசெய்ய விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தச் சுற்றிவளைப்பு பொலிஸ் விசேட அதிரடிப்படை குருணாகல் முகாமை சேர்ந்த அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பதுளை தல்தென பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் முனமல்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement