சுதந்திரமான தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரசியல் தலையீடுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 30 உற்சவங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரசியல் தலையீடு காரணமாக வாக்காளர்களுக்கு நியமனம் வழங்கல், பொருட்கள் விநியோகம் போன்ற பல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர், உத்தியோகபூர்வ குழுக்கள் இவ்விடயத்தில் கடுமையாக செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரித்துள்ளார்.
மேலும் தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து வேட்பாளர்களும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்த தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு - நிறுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் சுதந்திரமான தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரசியல் தலையீடுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 30 உற்சவங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.அரசியல் தலையீடு காரணமாக வாக்காளர்களுக்கு நியமனம் வழங்கல், பொருட்கள் விநியோகம் போன்ற பல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர், உத்தியோகபூர்வ குழுக்கள் இவ்விடயத்தில் கடுமையாக செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரித்துள்ளார்.மேலும் தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து வேட்பாளர்களும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.