• Mar 12 2025

பேருந்து அலங்காரங்கள் குறித்து ஆராய குழு - அரசு தீர்மானம்

Chithra / Mar 11th 2025, 1:10 pm
image


பொது போக்குவரத்து பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பில் பேருந்து அலங்காரம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை ஆய்வு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

அத்துடன், இது தொடர்பாக உரிய நடவடிக்கைக்கான பரிந்துரைகளுடன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஒரு குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி, மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகத்தின் முன் ஒப்புதலுடன் வாகனங்களின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்படலாம்.

அதன்படி, 1983 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மோட்டார் வாகனங்கள் (கட்டுமான) விதிமுறைகள் அவ்வப்போது திருத்தப்பட்டு, வாகனங்களை மாற்றியமைக்கக்கூடிய விதம் குறித்த விதிமுறைகள் வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

பேருந்து அலங்காரங்கள் குறித்து ஆராய குழு - அரசு தீர்மானம் பொது போக்குவரத்து பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பில் பேருந்து அலங்காரம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை ஆய்வு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.அத்துடன், இது தொடர்பாக உரிய நடவடிக்கைக்கான பரிந்துரைகளுடன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஒரு குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி, மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகத்தின் முன் ஒப்புதலுடன் வாகனங்களின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்படலாம்.அதன்படி, 1983 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மோட்டார் வாகனங்கள் (கட்டுமான) விதிமுறைகள் அவ்வப்போது திருத்தப்பட்டு, வாகனங்களை மாற்றியமைக்கக்கூடிய விதம் குறித்த விதிமுறைகள் வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement