• Jan 21 2025

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்; பெயர்களை வெளியிட்ட மத்திய வங்கி

Chithra / Jan 20th 2025, 12:02 pm
image


தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இதனை வெளிப்படுத்தியுள்ளது.

இதில் 21 நிறுவனங்கள், திருத்தப்பட்டவாறான 1998ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 (இ) பிரிவின் தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை நடத்தி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதேவேளை வங்கித்தொழில் சட்டத்தின் 83 (இ) பிரிவின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ள நிறுவனமொன்றின் பெயரை வெளிப்படுத்தலானது அந்த நிறுவனம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டளையொன்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்; பெயர்களை வெளியிட்ட மத்திய வங்கி தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ளது.ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இதனை வெளிப்படுத்தியுள்ளது.இதில் 21 நிறுவனங்கள், திருத்தப்பட்டவாறான 1998ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 (இ) பிரிவின் தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை நடத்தி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.இதேவேளை வங்கித்தொழில் சட்டத்தின் 83 (இ) பிரிவின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ள நிறுவனமொன்றின் பெயரை வெளிப்படுத்தலானது அந்த நிறுவனம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டளையொன்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement