• Jul 10 2025

மன்னார் நகரசபை புதிய தலைவர் மீது பொலிஸில் முறைப்பாடு

Chithra / Jul 9th 2025, 8:16 am
image


மன்னார் நகரசபை தலைவர் டனியேல் வசந்தனுக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் மன்னார் நகரசபையின் முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மன்னார் நகரசபை தலைவர் டனியேல் வசந்தன் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி தங்கள் நற்பெயருக்கும் அரச செயற்பாட்டுக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் மன்னார் நகரசபையின் முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்


மன்னார் நகரசபையின் புதிய தலைவர் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கடந்த காலங்களில் மன்னார் நகரசபையின் பண்டிகைகால கடைகள் ஒதுக்கீடு மற்றும் 5 ஜீ தொழில் நுட்ப சேவையை வழங்கும் செயற்பாட்டுக்கு அனுமதி வழங்க இலஞ்சம் பெற்றதாகவும்,

அவற்றில் ஊழல் இடம்பெற்றதாகவும் அது தொடர்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார் 

குறித்த முறைப்பாட்டில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் பகிரங்க குத்தகை மூலம் இடம்பெற்ற விற்பனையில்  எந்த  ஒரு ஊழலும் இடம்பெறாத நிலையில் வேண்டும் என்றே  தங்கள் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தனிப்பாட்ட உள்நோக்கம் கருதி  மன்னார் நகரசபை தலைவர் ஊடக சந்திப்பின் போது  கருத்து தெரிவித்துள்ளதாகவும்  மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்படி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபை புதிய தலைவர் மீது பொலிஸில் முறைப்பாடு மன்னார் நகரசபை தலைவர் டனியேல் வசந்தனுக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் மன்னார் நகரசபையின் முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.மன்னார் நகரசபை தலைவர் டனியேல் வசந்தன் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி தங்கள் நற்பெயருக்கும் அரச செயற்பாட்டுக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் மன்னார் நகரசபையின் முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்மன்னார் நகரசபையின் புதிய தலைவர் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கடந்த காலங்களில் மன்னார் நகரசபையின் பண்டிகைகால கடைகள் ஒதுக்கீடு மற்றும் 5 ஜீ தொழில் நுட்ப சேவையை வழங்கும் செயற்பாட்டுக்கு அனுமதி வழங்க இலஞ்சம் பெற்றதாகவும்,அவற்றில் ஊழல் இடம்பெற்றதாகவும் அது தொடர்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார் குறித்த முறைப்பாட்டில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் பகிரங்க குத்தகை மூலம் இடம்பெற்ற விற்பனையில்  எந்த  ஒரு ஊழலும் இடம்பெறாத நிலையில் வேண்டும் என்றே  தங்கள் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தனிப்பாட்ட உள்நோக்கம் கருதி  மன்னார் நகரசபை தலைவர் ஊடக சந்திப்பின் போது  கருத்து தெரிவித்துள்ளதாகவும்  மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்படி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement