• Nov 23 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

Chithra / Aug 3rd 2024, 9:47 am
image

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பொது வளங்களை துஷ்பிரயோகம் செய்தல், நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

அந்த முறைப்பாடுகள் அனைத்திற்கும் தேவையான உடனடி நடவடிக்கைகளும் தலையீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


  

இதேவேளை சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சகல அமைச்சுகளின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்து அமைச்சுகளின் செயலாளர்களுக்குத் தெளிவுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  தெரிவித்தார்.

அத்துடன், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, அரச சொத்துகள் தொடர்பான பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்றைய தினம் வரையில் 14 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் குவியும் முறைப்பாடுகள் எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.பொது வளங்களை துஷ்பிரயோகம் செய்தல், நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.அந்த முறைப்பாடுகள் அனைத்திற்கும் தேவையான உடனடி நடவடிக்கைகளும் தலையீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.  இதேவேளை சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதன்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், சகல அமைச்சுகளின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்து அமைச்சுகளின் செயலாளர்களுக்குத் தெளிவுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  தெரிவித்தார்.அத்துடன், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, அரச சொத்துகள் தொடர்பான பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்றைய தினம் வரையில் 14 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement