• May 07 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாளுக்குநாள் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Chithra / Apr 14th 2025, 7:56 am
image

 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை குற்றவியல் முறைப்பாடு மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 154 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று 5 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மார்ச் 3 ஆம் திகதி முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக 14 வேட்பாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் 46 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 11 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாளுக்குநாள் அதிகரிக்கும் முறைப்பாடுகள்  நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை குற்றவியல் முறைப்பாடு மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 154 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, நேற்று 5 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.அத்துடன் மார்ச் 3 ஆம் திகதி முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.இந்த சம்பவங்கள் தொடர்பாக 14 வேட்பாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் 46 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 11 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now