• Mar 21 2025

QR code மூலம் முறைப்பாடு - சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சோதனை

Chithra / Mar 20th 2025, 7:59 am
image

 

நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  உணவகங்களில் நேற்று திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற  QR code  மூலமான முறைப்பாடு  மற்றும் நேரடியாக வழங்கப்பட்ட முறைப்பாடு என்பனவற்றை அடிப்படையாக கொண்டு அதன் உண்மைத்தன்மையை அறிய சில உணவகங்களில்  பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகள் சிலவும் பரிசோதனை செய்யப்பட்டன.

இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற  வகையில் காணப்பட்ட உழுவா மற்றும் மாசி கைப்பற்றப்பட்டதுடன் அக்கடையின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல்  செய்யப்பட்டது.

மேற்படி நடவடிக்கையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  ஜே. மதனின்  ஆலோசனை மற்றும் வழிகாட்டலில்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள்   மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள பெண்கள் விடுதி சிற்றுண்டிசாலை உட்பட சம்மாந்துறை பகுதியில் உள்ள சிற்றுண்டி உற்பத்தி நிலையங்கள், இறைச்சிக் கடைகள் என்பன சுகாதார முறையில் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினரினால் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

இதன் போது குறித்த சிற்றுண்டிசாலை உரிமையாளருக்கு எதிராகவும்  இரண்டு உணவகங்களுக்கும் எதிராகவும் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டு சம்மாந்துறை நீதிவான் முன்னிலைப்படுத்தப்பட்டபோது 30 ஆயிரம் ரூபா  தண்டப்பணம் அறவிடப்பட்டது.


QR code மூலம் முறைப்பாடு - சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சோதனை  நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  உணவகங்களில் நேற்று திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற  QR code  மூலமான முறைப்பாடு  மற்றும் நேரடியாக வழங்கப்பட்ட முறைப்பாடு என்பனவற்றை அடிப்படையாக கொண்டு அதன் உண்மைத்தன்மையை அறிய சில உணவகங்களில்  பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.இதேவேளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகள் சிலவும் பரிசோதனை செய்யப்பட்டன.இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற  வகையில் காணப்பட்ட உழுவா மற்றும் மாசி கைப்பற்றப்பட்டதுடன் அக்கடையின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல்  செய்யப்பட்டது.மேற்படி நடவடிக்கையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  ஜே. மதனின்  ஆலோசனை மற்றும் வழிகாட்டலில்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள்   மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.இதேவேளை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள பெண்கள் விடுதி சிற்றுண்டிசாலை உட்பட சம்மாந்துறை பகுதியில் உள்ள சிற்றுண்டி உற்பத்தி நிலையங்கள், இறைச்சிக் கடைகள் என்பன சுகாதார முறையில் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினரினால் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.இதன் போது குறித்த சிற்றுண்டிசாலை உரிமையாளருக்கு எதிராகவும்  இரண்டு உணவகங்களுக்கும் எதிராகவும் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டு சம்மாந்துறை நீதிவான் முன்னிலைப்படுத்தப்பட்டபோது 30 ஆயிரம் ரூபா  தண்டப்பணம் அறவிடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement