• Jan 24 2025

காணியால் வந்த மோதல்; மண்வெட்டியால் அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பி!

Chithra / Jan 24th 2025, 7:19 am
image

 


சகோதரர்களுக்கிடையிலான மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காணி விற்பனை தொடர்பில் அண்ணனுக்கும் இரண்டு தம்பிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலாக மாறியுள்ளது.

இதன்போது அண்ணன் மீது தம்பிகளில் ஒருவர் மண்வெட்டியால் வெட்டியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அண்ணன் அயலவர்களால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயது நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் கரந்தெனிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், உயிரிழந்தவர்களின் இரண்டு தம்பிகளையும் கைது செய்துள்ளனர்.

காணியால் வந்த மோதல்; மண்வெட்டியால் அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பி  சகோதரர்களுக்கிடையிலான மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கொடூர சம்பவம் காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,காணி விற்பனை தொடர்பில் அண்ணனுக்கும் இரண்டு தம்பிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலாக மாறியுள்ளது.இதன்போது அண்ணன் மீது தம்பிகளில் ஒருவர் மண்வெட்டியால் வெட்டியுள்ளார்.இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அண்ணன் அயலவர்களால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயது நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.அவரின் சடலம் கரந்தெனிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், உயிரிழந்தவர்களின் இரண்டு தம்பிகளையும் கைது செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement