• Nov 28 2024

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டு கட்சிக்குள் தொடரும் குழப்பம்

Sharmi / Jul 18th 2024, 9:31 am
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேராவை களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கடந்த திங்கட்கிழமை தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக இதுவரை அறிவிக்கவில்லை. 

அதேவேளை பொதுஜன பெரமுனவினால், ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முன்வைத்தால் அதுபற்றி பரிசீலிக்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், தாம் எந்த வகையிலும் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டு கட்சிக்குள் தொடரும் குழப்பம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேராவை களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கடந்த திங்கட்கிழமை தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக இதுவரை அறிவிக்கவில்லை. அதேவேளை பொதுஜன பெரமுனவினால், ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முன்வைத்தால் அதுபற்றி பரிசீலிக்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், தாம் எந்த வகையிலும் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement