• Sep 20 2024

உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பினால் ஈ.பி.டி.பியிலும் குழப்பம்!

Chithra / Jan 11th 2023, 9:48 am
image

Advertisement

ஈ.பி.டி.பியின்  யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் நால்வர் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலிலே போட்டியிட மாட்டோம் எனும் நிலையில்  உறுதியாக இருந்து வருகின்றனர். 

இதன்காரணமாக இவர்களது  வீட்டிற்கு முன்னாள் முதல்வர் தலைமையில் ஐவர்  அடங்கிய குழு நேற்று முன்தினம் இரவு சென்று சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இதில் முன்னாள் முதல்வருடன், ஜீவன், செல்வ்வடிவேல் ஆசிரியர்  உட்பட ஐவர் கலந்துகொண்டனர். இங்கே ஆரம்பத்தில் செல்வவடிவேல் ஆசிரியரும் சிறிது ஆட்டம் கண்டு நின்றார். 

இரு மணிநேரம் நீடித்த இந்த சமரச முயற்சி குழப்ப நிலையில் இருந்த ஓர் உறுப்பினர் வீட்டில் நடந்த சமயம் போட்டியிட மறுக்கும்  நால்வரில் மேலும் இருவர் சந்திப்பு இடம்பெற்ற வீட்டிற்கு  சென்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது மூவரும் எதிர்வரும் தேர்தலில் ஈ.பி.டி.பியில்  இணைந்து போட்டியிட மறுத்து விட்டனர். 

இதன் காரணமாக  நேரடியாக வட்டாரங்களில் போட்டியிடாதுவிடினும் பட்டியலில் பெயர் இணைக்கப்படும் என முன்னாள் முதல்வர்  தெரிவித்துள்ளார்.  இதனையும் மூவரும் அடியோடு  மறுத்துள்ளனர். 

இதேநேரம் ஈ.பி.டி.பி கட்சியில் தேர்தல் வேட்பு மனு எழுதுவதில் புலமை மிக்கவர் என கட்சி நம்புபவர் கொழும்பில் அமைச்சரின் செயலகத்தில் பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் நேற்றைய தினம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். வடக்கு, கிழக்கு  மாகாணதிற்கான பட்டியல்  தயார் செய்யப்படுகின்றது.  வேட்புமனுக்கள் படிவங்களில் திங்கள் கிழமை எழுதப்படவுள்ளதாக உள் வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பினால் ஈ.பி.டி.பியிலும் குழப்பம் ஈ.பி.டி.பியின்  யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் நால்வர் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலிலே போட்டியிட மாட்டோம் எனும் நிலையில்  உறுதியாக இருந்து வருகின்றனர். இதன்காரணமாக இவர்களது  வீட்டிற்கு முன்னாள் முதல்வர் தலைமையில் ஐவர்  அடங்கிய குழு நேற்று முன்தினம் இரவு சென்று சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முன்னாள் முதல்வருடன், ஜீவன், செல்வ்வடிவேல் ஆசிரியர்  உட்பட ஐவர் கலந்துகொண்டனர். இங்கே ஆரம்பத்தில் செல்வவடிவேல் ஆசிரியரும் சிறிது ஆட்டம் கண்டு நின்றார். இரு மணிநேரம் நீடித்த இந்த சமரச முயற்சி குழப்ப நிலையில் இருந்த ஓர் உறுப்பினர் வீட்டில் நடந்த சமயம் போட்டியிட மறுக்கும்  நால்வரில் மேலும் இருவர் சந்திப்பு இடம்பெற்ற வீட்டிற்கு  சென்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது மூவரும் எதிர்வரும் தேர்தலில் ஈ.பி.டி.பியில்  இணைந்து போட்டியிட மறுத்து விட்டனர். இதன் காரணமாக  நேரடியாக வட்டாரங்களில் போட்டியிடாதுவிடினும் பட்டியலில் பெயர் இணைக்கப்படும் என முன்னாள் முதல்வர்  தெரிவித்துள்ளார்.  இதனையும் மூவரும் அடியோடு  மறுத்துள்ளனர். இதேநேரம் ஈ.பி.டி.பி கட்சியில் தேர்தல் வேட்பு மனு எழுதுவதில் புலமை மிக்கவர் என கட்சி நம்புபவர் கொழும்பில் அமைச்சரின் செயலகத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். வடக்கு, கிழக்கு  மாகாணதிற்கான பட்டியல்  தயார் செய்யப்படுகின்றது.  வேட்புமனுக்கள் படிவங்களில் திங்கள் கிழமை எழுதப்படவுள்ளதாக உள் வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement