• Nov 23 2024

மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை- இந்திய வீராங்கனைக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Tamil nila / Jun 29th 2024, 6:58 am
image

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை இந்திய மகளிர் அணி படைத்திருக்கிறது.

அந்தவகையில் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக இரட்டைச் சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை இந்தியாவின் இளம் துடுப்பாட்ட வீராங்கனை ஷஃபாலி வர்மா பெற்றுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஷஃபாலி வர்மா இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

ஷஃபாலி வர்மா 194 பந்துகளில் இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவின் அனாபெல் சதர்லேண்டின் 254 பந்துகளில் அடித்த இரட்டை சத சாதனையை ஷஃபாலி வர்மா முறியடித்தார்.

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஷஃபாலி இரட்டை சதம் அடித்தார்.

மகளிர் அணியின் முன்னாள் தலைவர் மிதாலி ராஜ்க்கு பிறகு டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையையும் ஷஃபாலி வர்மா பெற்றுள்ளார்.

22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீராங்கனை ஒருவர் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். மிதாலி ராஜ் கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்திருந்தார்.

அந்தப் போட்டியில் 407 பந்துகளை எதிர்கொண்ட அவர் 214 ஓட்டங்களை குவித்திருந்தார்.

113 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்த ஷஃபாலி வர்மா அடுத்த சதத்தை வெறும் 83 பந்துகளில் அடித்திருந்தார். அவர் 197 பந்துகளில் 205 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதேபோல், ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையையும் இந்திய மகளிர் அணி படைத்திருக்கிறது. 

மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை- இந்திய வீராங்கனைக்கு குவியும் வாழ்த்துக்கள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை இந்திய மகளிர் அணி படைத்திருக்கிறது.அந்தவகையில் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக இரட்டைச் சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை இந்தியாவின் இளம் துடுப்பாட்ட வீராங்கனை ஷஃபாலி வர்மா பெற்றுள்ளார்.இந்நிலையில் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஷஃபாலி வர்மா இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.ஷஃபாலி வர்மா 194 பந்துகளில் இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்தார்.இதன் மூலம் அவுஸ்திரேலியாவின் அனாபெல் சதர்லேண்டின் 254 பந்துகளில் அடித்த இரட்டை சத சாதனையை ஷஃபாலி வர்மா முறியடித்தார்.ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஷஃபாலி இரட்டை சதம் அடித்தார்.மகளிர் அணியின் முன்னாள் தலைவர் மிதாலி ராஜ்க்கு பிறகு டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையையும் ஷஃபாலி வர்மா பெற்றுள்ளார்.22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீராங்கனை ஒருவர் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். மிதாலி ராஜ் கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்திருந்தார்.அந்தப் போட்டியில் 407 பந்துகளை எதிர்கொண்ட அவர் 214 ஓட்டங்களை குவித்திருந்தார்.113 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்த ஷஃபாலி வர்மா அடுத்த சதத்தை வெறும் 83 பந்துகளில் அடித்திருந்தார். அவர் 197 பந்துகளில் 205 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.அதேபோல், ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையையும் இந்திய மகளிர் அணி படைத்திருக்கிறது. 

Advertisement

Advertisement

Advertisement