• Sep 20 2024

கல்விப் புரட்சி மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்! ராமேஷ்வரன்!!

crownson / Dec 12th 2022, 11:25 am
image

Advertisement

கல்விப் புரட்சி மூலமே சமூகமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதில் அன்றும் இன்றும் என்றும் காங்கிரஸ் உறுதியாக நிற்கின்றது. 

அதனால் தான் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், அபிவிருத்திகளின் போது பாடசாலைக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம், திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம், மவுண்ட்வேர்ணன் தமிழ் மகா வித்தியாலயம், போகாவத்தை சிங்கள வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து புலமைப் பரிசிலில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும், க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், போகாவத்தை மற்றும் ஸ்டோனிகிளிப் வட்டார கரப்பந்தாட்ட போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும், ஸ்டோனிகிளிப் வட்டார கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்ட மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 செல்வத்துள் சிறந்த செல்வம் கல்விச் செல்வமாகும். அந்த செல்வத்தை எமது சமூகத்துக்கு அள்ளி கொடுத்து, அதன்மூலம் முன்னேற்றத்தை அடையவே காங்கிரஸ் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

கல்விக்காக நாம் செய்த சேவைகள் ஏராளம். எமது பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் காலமாக இருக்கட்டும், தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலமாக இருக்கட்டும், தற்போதைய எமது செயலாளர் ஜீவன் தொண்டமானின் காலமாக இருக்கட்டும் கல்விக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது.

கல்வியால் எமது சமூகம் உயர வேண்டும் என்பதற்காகவே அன்று பெருந்தலைவரால் பாடசாலைகள் அமைத்து கொடுக்கப்பட்டன. 

மற்றைய சமூகம்போல் நாம் முன்னேற வேண்டுமானால், தோட்ட தொழிலில் இருந்து வெளியில் வரவேண்டுமானால் எமக்கு உள்ள ஒரே ஆயுதம் கல்வியாகும். 

எமது மலையக சமூகம் தற்போது முன்னேறி வருகின்றது. எல்லா இடங்களிலும் எம்மவர்கள் சிறந்த தொழிலில் உள்ளனர்.

இம்முறை பாடசாலைகளின் பெறுபேறும் சிறப்பாக உள்ளது. என்னதான் செல்வம் இருந்தாலும், கல்வி இல்லாவிட்டால், மதிப்பில்லை.

எனவே, கல்வி செல்வத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான வசதிகளையும், வளங்களையும் பெற்றுக்கொடுக்க நாம் தயார்.

கல்வி குறித்து பெற்றோரும் கவனம் செலுத்த வேண்டும். கஷ்டம் இருந்தாலும் பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தக்கூடாது.  என்றும் கூறியுள்ளார்.

கல்விப் புரட்சி மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் ராமேஷ்வரன் கல்விப் புரட்சி மூலமே சமூகமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதில் அன்றும் இன்றும் என்றும் காங்கிரஸ் உறுதியாக நிற்கின்றது.  அதனால் தான் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், அபிவிருத்திகளின் போது பாடசாலைக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம், திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம், மவுண்ட்வேர்ணன் தமிழ் மகா வித்தியாலயம், போகாவத்தை சிங்கள வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து புலமைப் பரிசிலில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும், க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், போகாவத்தை மற்றும் ஸ்டோனிகிளிப் வட்டார கரப்பந்தாட்ட போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும், ஸ்டோனிகிளிப் வட்டார கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்ட மைதானத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், செல்வத்துள் சிறந்த செல்வம் கல்விச் செல்வமாகும். அந்த செல்வத்தை எமது சமூகத்துக்கு அள்ளி கொடுத்து, அதன்மூலம் முன்னேற்றத்தை அடையவே காங்கிரஸ் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. கல்விக்காக நாம் செய்த சேவைகள் ஏராளம். எமது பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் காலமாக இருக்கட்டும், தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலமாக இருக்கட்டும், தற்போதைய எமது செயலாளர் ஜீவன் தொண்டமானின் காலமாக இருக்கட்டும் கல்விக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. கல்வியால் எமது சமூகம் உயர வேண்டும் என்பதற்காகவே அன்று பெருந்தலைவரால் பாடசாலைகள் அமைத்து கொடுக்கப்பட்டன. மற்றைய சமூகம்போல் நாம் முன்னேற வேண்டுமானால், தோட்ட தொழிலில் இருந்து வெளியில் வரவேண்டுமானால் எமக்கு உள்ள ஒரே ஆயுதம் கல்வியாகும்.  எமது மலையக சமூகம் தற்போது முன்னேறி வருகின்றது. எல்லா இடங்களிலும் எம்மவர்கள் சிறந்த தொழிலில் உள்ளனர். இம்முறை பாடசாலைகளின் பெறுபேறும் சிறப்பாக உள்ளது. என்னதான் செல்வம் இருந்தாலும், கல்வி இல்லாவிட்டால், மதிப்பில்லை. எனவே, கல்வி செல்வத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான வசதிகளையும், வளங்களையும் பெற்றுக்கொடுக்க நாம் தயார்.கல்வி குறித்து பெற்றோரும் கவனம் செலுத்த வேண்டும். கஷ்டம் இருந்தாலும் பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தக்கூடாது.  என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement