• Nov 22 2024

இலங்கையின் முதலாவது வனவிலங்கு சுரங்கப்பாதையின் நிர்மாணம் ஆரம்பம்..!samugammedia

Tharun / Mar 1st 2024, 6:35 pm
image

இலங்கையில் காட்டு யானைகளுடன் புகையிரதம் மோதுவதால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் தேசிய நடவடிக்கையின் முதற்கட்டமாக  வனவிலங்கு சுரங்கப்பாதையின் கட்டுமானபணிகள்  கல்கமுவ - கட்டதீவுல - காசிகோட்டையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைவாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இலங்கை புகையிரத திணைக்களம், சுராகிமு புகையிரத தேசிய இயக்கம் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுடன் பலமுறை கலந்துரையாடியதை அடுத்து, யானைகள் ஆபத்தில் சிக்குவதைத் தடுப்பதற்காக இந்த விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  கடந்த சில வருடங்களில் அதிகளவான யானைகள் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சுரங்கபாதையானது 150 - 200 காட்டுயானைகள் வழமையாக பயணிக்கும் அம்பன்பொல மற்றும் கல்கமுவ புகையிரத நிலையங்களுக்கு இடையில்  காசிகோட்டை பகுதியில் உள்ள புகையிரத பாதையின் கீழ்  ரயில் பாதையில் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் இந்த சுரங்க பாதையானது, இந்திய கடனுதவியின் கீழ் மஹவ-ஓமந்தே புகையிரத புனரமைப்பு திட்டத்தின் கீழ் இந்த வனவிலங்கு சுரங்கப்பாதையை நிர்மாணிப்பதற்கான  முடிவு எடுக்கப்பட்டு, அதன் நிர்மாணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கையின் முதலாவது வனவிலங்கு சுரங்கப்பாதையின் நிர்மாணம் ஆரம்பம்.samugammedia இலங்கையில் காட்டு யானைகளுடன் புகையிரதம் மோதுவதால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் தேசிய நடவடிக்கையின் முதற்கட்டமாக  வனவிலங்கு சுரங்கப்பாதையின் கட்டுமானபணிகள்  கல்கமுவ - கட்டதீவுல - காசிகோட்டையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைவாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இலங்கை புகையிரத திணைக்களம், சுராகிமு புகையிரத தேசிய இயக்கம் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுடன் பலமுறை கலந்துரையாடியதை அடுத்து, யானைகள் ஆபத்தில் சிக்குவதைத் தடுப்பதற்காக இந்த விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  கடந்த சில வருடங்களில் அதிகளவான யானைகள் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சுரங்கபாதையானது 150 - 200 காட்டுயானைகள் வழமையாக பயணிக்கும் அம்பன்பொல மற்றும் கல்கமுவ புகையிரத நிலையங்களுக்கு இடையில்  காசிகோட்டை பகுதியில் உள்ள புகையிரத பாதையின் கீழ்  ரயில் பாதையில் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இந்த சுரங்க பாதையானது, இந்திய கடனுதவியின் கீழ் மஹவ-ஓமந்தே புகையிரத புனரமைப்பு திட்டத்தின் கீழ் இந்த வனவிலங்கு சுரங்கப்பாதையை நிர்மாணிப்பதற்கான  முடிவு எடுக்கப்பட்டு, அதன் நிர்மாணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement