• May 20 2024

மருதமுனையில் கடலரிப்பை தடுக்க தற்காலிக தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணி தீவிரம்!

Tamil nila / Dec 11th 2022, 3:46 pm
image

Advertisement

கடந்த இரண்டு தினங்களாக வங்களா விரிகுடா கடல் பரப்பில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் நால பக்கங்களிலும் கரையோர பிரதேசங்களில் கடலரிப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

மருதமுனை கடற்கரையில் கடலரிப்பு காரணமாக பல தென்னை மரங்கள் முறிந்து நீருக்குள் விழுந்துள்ளன. இதே வேளை மருதமுனை பிரதேசத்தின் அடையாளமாக காணப்பட்ட 'லைட் ஹவுஸ்' கடல் அலையினால் சேதமடைந்து விழுந்து விடும் என்ற அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டன.


கரையோர பாதுகாப்பு திணைக்களம், கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை, சிவில் சமூகத்தினர், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கடலரிப்பை தடுப்பதற்கான மண் மூடைகளைக் கட்டி தற்காலிக தடுப்புச் சுவர்களை அமைத்தனர்.

இந்நிலையில் ஸ்தலத்திற்கு வருகை தந்த கரையோரம் பேனல் பாதுகாப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிரதம பொறியியலாளர் எம்.துளசிதாசனின் முயற்சியினால் ஜியோ டெக்ஸ் காபட் விரிப்புகள் விரிக்கப்பட்டு கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பிரதேச மக்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர். எதிர்காலத்தில் கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப் படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மருதமுனையில் கடலரிப்பை தடுக்க தற்காலிக தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணி தீவிரம் கடந்த இரண்டு தினங்களாக வங்களா விரிகுடா கடல் பரப்பில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் நால பக்கங்களிலும் கரையோர பிரதேசங்களில் கடலரிப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.மருதமுனை கடற்கரையில் கடலரிப்பு காரணமாக பல தென்னை மரங்கள் முறிந்து நீருக்குள் விழுந்துள்ளன. இதே வேளை மருதமுனை பிரதேசத்தின் அடையாளமாக காணப்பட்ட 'லைட் ஹவுஸ்' கடல் அலையினால் சேதமடைந்து விழுந்து விடும் என்ற அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டன.கரையோர பாதுகாப்பு திணைக்களம், கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை, சிவில் சமூகத்தினர், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கடலரிப்பை தடுப்பதற்கான மண் மூடைகளைக் கட்டி தற்காலிக தடுப்புச் சுவர்களை அமைத்தனர். இந்நிலையில் ஸ்தலத்திற்கு வருகை தந்த கரையோரம் பேனல் பாதுகாப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிரதம பொறியியலாளர் எம்.துளசிதாசனின் முயற்சியினால் ஜியோ டெக்ஸ் காபட் விரிப்புகள் விரிக்கப்பட்டு கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பிரதேச மக்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர். எதிர்காலத்தில் கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப் படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement