• May 18 2024

மாகாண சாதனையாளர்களுக்கு பணிப்பாளர் முன்னிலையில் மகத்தான கௌரவம்!

Tamil nila / Dec 11th 2022, 3:58 pm
image

Advertisement

கிழக்கு மாகாண மட்டத்தில் சாதனை நிகழ்த்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (10.12.2022) மாலை 6.30 மணிக்கு மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் மருதமுனை டில்கோ (DILCO) அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.


அமைப்பு தலைவர் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸஹீட் தலைமையில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி. என். புள்ளநாயகம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தார். கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல்   நஜீம் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக சரோ பார்ம் (Saro farm) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எச்.எம். தாஜுதீன் கலந்து கொண்டதுடன், கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் பெற்றோர்கள், துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



நிகழ்வின் போது மருதமலையில் உள்ள பாடசாலைகளில் இருந்து மாகாண மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்டத்தில் சாதனை நிகழ்த்திய சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட வுள்ளார்கள்.



இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளை டில்கோ அமைப்பினர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவித்தார்கள்.

மாகாண சாதனையாளர்களுக்கு பணிப்பாளர் முன்னிலையில் மகத்தான கௌரவம் கிழக்கு மாகாண மட்டத்தில் சாதனை நிகழ்த்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (10.12.2022) மாலை 6.30 மணிக்கு மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் மருதமுனை டில்கோ (DILCO) அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.அமைப்பு தலைவர் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸஹீட் தலைமையில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி. என். புள்ளநாயகம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தார். கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல்   நஜீம் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக சரோ பார்ம் (Saro farm) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எச்.எம். தாஜுதீன் கலந்து கொண்டதுடன், கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் பெற்றோர்கள், துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்வின் போது மருதமலையில் உள்ள பாடசாலைகளில் இருந்து மாகாண மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்டத்தில் சாதனை நிகழ்த்திய சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட வுள்ளார்கள்.இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளை டில்கோ அமைப்பினர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவித்தார்கள்.

Advertisement

Advertisement

Advertisement