• Nov 28 2024

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்னால் தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம்

Tharmini / Nov 26th 2024, 9:47 am
image

ஈ 8 விசாவில் தென் கொரியாவுக்கு தொழில் நிமித்தம் செல்வதற்கு எதிர்பார்த்துள்ள சிலர்,

அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக கொரியாவில் தொழிலுக்கு செல்ல இருந்த வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக தெரிவித்து,

பத்தரமுலலையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்னால் சத்தியக்கரக போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவந்தவர்களில் சிலரை அமைச்சர் விஜித்த ஹேரத் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

இதன்போது ஈ8 விசாவில் தென்கொரியாவுக்கு தொழிலுக்கு செலவதை சட்ட ரீதியாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

என்றாலும் தென்கொரியாவுக்கான தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் அதனை மறைத்து வருவதாகவும் இதனால் அவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டிய காலம் நிறைவடைய இன்னும் சில நாட்களே இருப்பதால், காலத்தை நீடித்து வழங்குமாறு தெரிவித்தும் இவர்கள் போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் ஈ8 விசாவில் தொழிலுக்கு அனுப்புவது சட்டவிரோத செயல், அதனால் அதனை அனுமதிக்க முடியாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் பணியகத்துக்கு தெரியாமல் விசா கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. 

தென்கொரியாவுக்கான தொழில் வாய்ப்பும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை எனவும் பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பாக முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிடுகையில், ஈ8 விசாவில் தென்கொரியாவுக்கு தொழிலுக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கத்துடன் நாங்கள் கலந்துரையாடி இருந்தோம்.

அவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து செயற்படுவதாகவே தெரிவித்திருந்தனர்.

என்றாலும் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

என்றாலும் தற்போது இந்த விடயத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தலையிட்டால் இந்த பிரச்சினைப்பு தீர்வுகாண முடியும் என்றார்.

இருந்தபோதும் ஈ8 விசாவில் தென்கொரியாவில் தொழிலை எதிர்பார்த்துள்ளவர்களும், ஏற்கனவே கொரியாவில் தொழில் செய்துவிட்டு விடுமுறையில் வந்து மீண்டும் அங்கு செல்ல முடியாமல் இருப்பவர்களும் மூன்றாவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், நேற்று (25) , இப்பிரச்சனைக்கு தீர்வு தேடி போராட்டக்காரர்கள் அனைவரும் ஜனாதிபதி செயலகத்திற்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் சென்று தமது பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை உள்ளடக்கிய மனுக்களை சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்னால் தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம் ஈ 8 விசாவில் தென் கொரியாவுக்கு தொழில் நிமித்தம் செல்வதற்கு எதிர்பார்த்துள்ள சிலர், அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக கொரியாவில் தொழிலுக்கு செல்ல இருந்த வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக தெரிவித்து, பத்தரமுலலையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்னால் சத்தியக்கரக போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவந்தவர்களில் சிலரை அமைச்சர் விஜித்த ஹேரத் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.இதன்போது ஈ8 விசாவில் தென்கொரியாவுக்கு தொழிலுக்கு செலவதை சட்ட ரீதியாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.என்றாலும் தென்கொரியாவுக்கான தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் அதனை மறைத்து வருவதாகவும் இதனால் அவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டிய காலம் நிறைவடைய இன்னும் சில நாட்களே இருப்பதால், காலத்தை நீடித்து வழங்குமாறு தெரிவித்தும் இவர்கள் போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் ஈ8 விசாவில் தொழிலுக்கு அனுப்புவது சட்டவிரோத செயல், அதனால் அதனை அனுமதிக்க முடியாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பணியகத்துக்கு தெரியாமல் விசா கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. தென்கொரியாவுக்கான தொழில் வாய்ப்பும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை எனவும் பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த விடயம் தொடர்பாக முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிடுகையில், ஈ8 விசாவில் தென்கொரியாவுக்கு தொழிலுக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கத்துடன் நாங்கள் கலந்துரையாடி இருந்தோம்.அவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து செயற்படுவதாகவே தெரிவித்திருந்தனர்.என்றாலும் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் தற்போது இந்த விடயத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தலையிட்டால் இந்த பிரச்சினைப்பு தீர்வுகாண முடியும் என்றார்.இருந்தபோதும் ஈ8 விசாவில் தென்கொரியாவில் தொழிலை எதிர்பார்த்துள்ளவர்களும், ஏற்கனவே கொரியாவில் தொழில் செய்துவிட்டு விடுமுறையில் வந்து மீண்டும் அங்கு செல்ல முடியாமல் இருப்பவர்களும் மூன்றாவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், நேற்று (25) , இப்பிரச்சனைக்கு தீர்வு தேடி போராட்டக்காரர்கள் அனைவரும் ஜனாதிபதி செயலகத்திற்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் சென்று தமது பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை உள்ளடக்கிய மனுக்களை சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement