• Oct 06 2024

இன்று நாடு திரும்பும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜெரோம்! கைது செய்யப்படுவாரா? samugammedia

Chithra / May 21st 2023, 7:15 am
image

Advertisement

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று(21.05.2023) நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமது இன்ஸ்டாகிராம் தளத்தில் இதற்கு முன்னர்  நாட்டுக்கு மீள திரும்புவது குறித்து அவர் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் அவர் நாடு திரும்பியவுடன் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்கப்படுகின்றது. 

மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்த போதகர்  ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

மதம் குறித்து அவர் பேசிய சில கருத்துக்களுடனான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பல சர்ச்சைகளையும் தோற்றுவித்துள்ளது.  

அவரது மதம் சார்பான கருத்துக்கள் புத்த பெருமானை அவமதிப்பதாக அமைந்துள்ளது என குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

போதகர் ஜெரோமுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி  பல சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்ததோடு, அடிப்படை உரிமை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இன்று நாடு திரும்பும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜெரோம் கைது செய்யப்படுவாரா samugammedia சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று(21.05.2023) நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.தமது இன்ஸ்டாகிராம் தளத்தில் இதற்கு முன்னர்  நாட்டுக்கு மீள திரும்புவது குறித்து அவர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் நாடு திரும்பியவுடன் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்கப்படுகின்றது. மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்த போதகர்  ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மதம் குறித்து அவர் பேசிய சில கருத்துக்களுடனான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பல சர்ச்சைகளையும் தோற்றுவித்துள்ளது.  அவரது மதம் சார்பான கருத்துக்கள் புத்த பெருமானை அவமதிப்பதாக அமைந்துள்ளது என குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.போதகர் ஜெரோமுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி  பல சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்ததோடு, அடிப்படை உரிமை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement